திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால் இலவச தரிசனத்தில் பக்தர்கள் 30 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரத சப்தமி விழாவையொட்டி ஒரே நாளில் மலையப்ப சுவாமி 7 வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.
இந்த நிகழ்வை காண நான்கு மாட வீதிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருக்கும் நிலையில், கோயிலில் உள்ள மூல மூர்த்தியைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களுக்கு முப்பது மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
















