கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழாவுக்கான பாஸ் வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
புகழ்பெற்ற இந்த கோயிலில் திருப்பணிகள் நிறைவடைந்து கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டது. முன்னதாக விழாவுக்கான பாஸ் வழங்குவதில் முறைகேடுகள் நடைபெற்றதாக கூறி மண்டக படிகாரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய அவர்கள் கோயிலுக்கு நன்கொடை வழங்கியவர்களுக்கு பாஸ் கிடைக்கவில்லை எனவும் அதிகாரிகளின் உறவினர்களுக்கு மட்டுமே பாஸ் வழங்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டினர்.
















