கஞ்சா கடத்தும் மையமாக தமிழகத்தை மாற்றிய திமுக - TTV கடும் கண்டனம்!
Jan 25, 2026, 05:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கஞ்சா கடத்தும் மையமாக தமிழகத்தை மாற்றிய திமுக – TTV கடும் கண்டனம்!

Manikandan by Manikandan
Jan 25, 2026, 03:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் அதிகரிக்கும் சட்டவிரோதச் செயல்களால் கேள்விக்குறியாகும் பொதுமக்களின் பாதுகாப்பு – அண்டை நாடுகளுக்குக் கஞ்சா கடத்தும் மையமாக தமிழகத்தை மாற்றிய திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில்

சேலம் மாவட்டம் மேச்சேரி பேருந்து நிலையம் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக திமுக நிர்வாகி ஒருவர் கைதாகியிருக்கும் நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 110 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் ஆளுங்கட்சி ஆதரவோடு நடைபெறும் சட்டவிரோத மதுபான விற்பனையும், எந்தவித தடங்கலுமின்றி தமிழகத்திலிருந்து அண்டை நாடுகளுக்குக் கடத்தும் அளவிற்கான கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கமும் தான் திமுக ஆட்சியின் மிகப்பெரிய சாதனையாக அமைந்திருக்கிறது.

தமிழகத்தில் அரங்கேறும் குற்றச்சம்பவங்களிலும், சட்டவிரோதச் செயல்களிலும் ஏதேனும் ஒருவகையில் ஆளுங்கட்சி நிர்வாகிகளின் தலையீடு இருப்பதும், அவர்களின் மீது பாரபட்சமற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள காவல்துறை தயங்குவதும் ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை அடியோடு சிதைக்கச் செய்திருக்கிறது.

எனவே, தமிழகத்திற்குள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் எப்படி வருகிறது? அண்டை நாடுகளுக்குக் கடத்தப்படுவதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? யார்? என்பதைக் கண்டறிந்து அவற்றை கட்டுப்படுத்துவதோடு, எஞ்சியிருக்கும் ஆட்சிக் காலத்திலாவது தமிழகத்தில் புரையோடிப் போயிருக்கும் சட்டவிரோதச் செயல்களைத் தடுத்து நிறுத்திட வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன் என அமமுக பொதுச்செயலாளர் TTV தினகரன் கூறியுள்ளார்!

Tags: liquor salesDMKttvTTV DinakaranAMMKmkstalin
ShareTweetSendShare
Previous Post

திரூநீர்மலை அருகே தனியார் பேருந்து கவிழந்து விபத்து – டயர் வெடித்ததால் விபரீதம்!

Next Post

சேற்றில் சிக்கிய ஒற்றை காட்டு யானை -வனத்துறையினரிடம் பொதுமக்கள் சரமாரி கேள்வி!

Related News

2026-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிப்பு – 5 தமிழர்களுக்கு பத்மஸ்ரீ!

சிக்கலில் மாநிலங்களின் நிதி நிலைமை- எச்சரித்த RBI!

ஏஐ தாக்க உச்சி மாநாட்டின் நோக்கம்.. – மன் கி பாத் நிழ்ச்சியில் பிரதமர் மோடி உரை

குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 33 பேருக்கு விருதுகளை அறிவித்த மத்திய அரசு!

நாடு முழுவதும் நாளை குடியரசு தினம் கொண்டாட்டம் -மெரினா கடற்கரையில் தேசிய கொடியேற்றும் ஆளுநர் R.N.ரவி

சேற்றில் சிக்கிய ஒற்றை காட்டு யானை -வனத்துறையினரிடம் பொதுமக்கள் சரமாரி கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

கஞ்சா கடத்தும் மையமாக தமிழகத்தை மாற்றிய திமுக – TTV கடும் கண்டனம்!

திரூநீர்மலை அருகே தனியார் பேருந்து கவிழந்து விபத்து – டயர் வெடித்ததால் விபரீதம்!

அமெரிக்க ராணுவத்திற்கு வலிமை சேர்க்கும் அதிபர் டிரம்ப்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 33 பேருக்கு குடியரசு தலைவர் விருது அறிவிப்பு!

வடிவேலு இருப்பது ஆமை நுழைந்த கட்சி, நாங்கள் இருப்பது அழகான கட்சி – நடிகர் கஞ்சா கருப்பு

சட்டமன்ற தேர்தலில் திமுகவிடம் 12 தொகுதிகள் கேட்கும் மக்கள் நீதி மய்யம் கட்சி!

பேச்சுவார்த்தைக்கு இடையே உக்ரைன் மீது ரஷ்ய தாக்குதல்!

அரசாணையை மீறி சர்ச்சையை கிளப்பிய தாம்பரம் மாநகராட்சி – மக்கள் அதிர்ச்சி!

குடியாத்தம் அரசு மருத்துவமனை விவகாரம் – EPS எடுத்த ஆக்‌ஷன்..DMK கொடுத்த ரியாக்ஷன்!

நாய் குறுக்கே வந்ததால் விபரீதம்…சாலை தடுப்பில் ஏறி நின்ற கார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies