வங்க தேசத்தில் 23 வயது இந்து இளைஞர் மர்ம நபர்களால் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குமில்லா மாவட்டத்தில் உள்ள லக்ஷ்மிபூர் கிராமத்தில் சஞ்சல் சந்திர பௌமிக் என்ற இளைஞர் வசித்து வந்தார்.
இவர், நர்சிங்டி பகுதியில் உள்ள வாகன பழுது நீக்குமிடத்தில் மெக்கானிக்காக பணியாற்றி வந்தார். இந்நிலையில் பணி முடித்து அங்கு தூங்கி கொண்டிருந்த சஞ்சல் சந்திர பௌமிக்கை மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றனர்.
வங்க தேசத்தில் இந்துக்கள் மீதான வன்முறை அதிகரித்து வரும் நிலையில் இந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















