நாட்டின் 77வது குடியரசு தின விழா, சீனாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
சீனாவின் வணிகத் தலைநகரான ஷாங்காயில் உள்ள இந்தியத் தூதரகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
இவ்விழாவுக்கு தலைமை தாங்கிய ஷாங்காயின் இந்தியத் தூதர் பிரதிக் மாத்தூர் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையை வாசித்தார்.
இவ்விழாவில், இந்திய வம்சாவளியினர், சீன மக்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் என 400-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய தூதர் மாத்தூர், பிரதமர் மோடி சீனாவுக்கு மேற்கொண்ட பயணத்தால், இந்தியா – சீனா இடையேயான உறவில் ஒரு புதிய உத்வேகம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
















