நீச்சல் குளத்தில் அலைபாய்ந்த மூவர்ணக் கொடி – தண்ணீரில் ததும்பிய தேசபக்தி
நாடு முழுவதும் குடியரசு தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், குஜராத் மாநிலம் வதோதராவில் இளம் நீச்சல் வீரர்கள் தங்களது தேசப்பற்றை வெளிப்படுத்தியுள்ளனர்.
நீச்சல் குளத்தில் தேசியக் கொடியை ஏந்தியபடி நீச்சலடித்து அசத்தியுள்ளனர்.
நீச்சல் குளத்தின் மேற்பரப்பில் மூவர்ணக் கொடி அலைபாய்ந்தபடி வீரர்கள் சீராக நீந்திச் சென்றது அங்கிருந்த பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தது.
















