மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விவசாய நிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகள், 50-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களைச் சேதப்படுத்தியால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
மள்ளப்புரம் ஊராட்சிக்குட்பட்ட மலை அடிவாரப் பகுதிகளில் அடிக்கடி வனவிலங்குகள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்துவது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில், மலையிலிருந்து இறங்கிய காட்டு யானைகள் கூட்டம், அய்யனார்கோயில் – புலவர் ஊரணி பகுதியில் உள்ள பார்வதி என்பவரின் தோட்டத்திற்குள் புகுந்து 50-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்திச் சென்றது.
இதனையடுத்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் நேரில் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசா கண்ணிர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
















