வேலூர் மாவட்டம் மாச்சம்பட்டு ஊராட்சியில் எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என கூறி கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மாச்சம்பட்டு ஊராட்சி மன்ற தலைவராக திமுகவை சேர்ந்த ஜெயந்தி தாமோதரன் என்பவர் பதவி வகித்து வருகிறார். இந்த கிராமத்தில் எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் குடியரசு தின விழாவை ஒட்டி நடைபெற்ற கிராம சபா கூட்டத்திற்கும் ஊராட்சி மன்ற தலைவர் வராததால் ஆத்திரமடைந்த மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
















