வானொலி அழிந்து வருகிறது என்று பலர் கூறினாலும், சரியான உள்ளடக்கம் மற்றும் மக்களோடு இணையும் நிகழ்ச்சிகள் இருந்தால் அது உயிர்ப்புடன் இருக்கும் என பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
வானொலி துறையில் 55 ஆண்டுகள் சேவையாற்றிய கோவையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஸ்ரீதருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, அவர் அளித்த பேட்டியில், 55 ஆண்டுகளாக இடைவிடாது பணியாற்றி ஓய்வுபெற்ற பின்பும் வானொலி மற்றும் ஊடகத்துறையுடன் தொடர்பு வைத்துள்ளதால் பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.
இந்த விருது, வானொலி துறையில் பணியாற்றும் அனைவருக்கும் பெரும் ஊக்கமளிக்கும் எனவும் கூறினார். மேலும், தனக்கு விருது அறிவித்த மத்திய அரசுக்கு ஸ்ரீதர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
















