இந்தியத் தேசியக்கொடிக்கு ஆட்டோ ஓட்டுநர் மரியாதை செலுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
77-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், சிறுமி ஒருவர் தனது காரின் ஜன்னல் வழியாக இந்தியத் தேசியக் கொடியை அசைத்தபடி உற்சாகமாகச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அந்தக் கொடி சிறுமியின் கையிலிருந்து நழுவிச் சாலையில் விழுந்தது. இதனையடுத்து, காருக்குப் பின்னால் சென்ற ஆட்டோ ஓட்டுநர், கொடி விழுவதைக் கண்டதும் உடனடியாகத் தனது வாகனத்தை நிறுத்தினார்.
பின்னர் அவர், ஆட்டோவிலிருந்து இறங்கிச் சென்று, சாலையில் விழுந்த தேசியக் கொடியை கையில் எடுத்து, கொடியில் படிந்திருந்த தூசியைத் துடைத்து சிறுமியிடம் மிகுந்த அன்புடன் மீண்டும் ஒப்படைத்தார்.
இந்தக் காட்சியை ஆட்டோவில் பயணித்த பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்ட நிலையில், தேசபக்தி என்பது பேச்சில் மட்டுமல்ல, இத்தகைய சிறிய செயல்களிலும் இருப்பதாக ஆட்டோ ஓட்டுநரை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
VIDEO LINK : https://x.com/TamilJanamNews/status/2016060578973004280
















