சிவகங்கை ரயில் நிலையத்தில் இன்று முதல் நின்று செல்லும் தாம்பரம் – செங்கோட்டை விரைவு ரயிலுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சிவகங்கை ரயில் நிலையம் வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். குறிப்பாக, தாம்பரம் – செங்கோட்டை மற்றும் எர்ணாகுளம் – வேளாங்கண்ணி ஆகிய விரைவு ரயில்கள் சிவகங்கை ரயில் நிலையத்தில் நின்று செல்ல வழிவகை செய்ய வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகனிடம் பொதுமக்கள் வலியுறுத்தினர்.
இதனை தொடர்ந்து, எல்.முருகன் மேற்கொண்ட முயற்சியால் சிவகங்கை ரயில் நிலையத்தில் 2 விரைவு ரயில்கள் நின்று செல்லும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்தார்.
இதனடிப்படையில், சிவகங்கை ரயில் நிலையம் வந்த தாம்பரம் – செங்கோட்டை விரைவு ரயிலுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். லோகோ பைலட்டுக்கு பொன்னாடை போர்த்தியும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மேலும், சிவகங்கை ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுத்த மத்திய அமைச்சர்கள் எல்.முருகன், அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோருக்கு பொதுமக்கள் நன்றியை தெரிவித்து கொண்டனர்.
















