இந்த உலகை பாதுகாப்பானதாகவும், நிலையானதாகவும் வல்லமைமிக்க இந்தியா மாற்றும் என்று ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான்டெர் லேயன் பாராட்டி உள்ளார்.
3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான்டெர் லேயன், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆன்டோனியோ கோஸ்டா ஆகியோர், டெல்லியில் நடைபெற்ற 77வது குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

கடைமை பாதையில் நடைபெற்ற குடியரசு தின விழாவின் கொண்டாட்டங்களையும், கலை நிகழ்ச்சிகளையும் அவர்கள் கண்டுகளித்தனர்.
இந்நிகழ்வு குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிடுள்ள ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான்டெர் லேயன், குடியரசு தின கொண்டாட்டங்களில் தலைமை விருந்தினர்களாக இருப்பது வாழ்நாள் முழுவதும் கிடைக்கும் மரியாதை என்று தெரிவித்தார்.
வல்லமைமிக்க இந்தியா இந்த உலகை மேலும் நிலையானதாகவும், வளமானதாகவும், பாதுகாப்பாகவும் மாற்றுவதாகவும், இதில் தாங்களும் பயன்பெறுவதாகவும் கூறியுள்ளார்.
















