ராமநாதபுரம் திமுக எம்எல்ஏ காதர் பாட்ஷா தேர்தலையொட்டி மக்களுக்கு பரிசுப்பொருட்கள் வழங்கியாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க அழைத்து வரப்பட்ட பெண்களுக்கு திமுக எம்எல்ஏ காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் பரிசு பொருட்களை வழங்கியதாக புகார் எழுந்துள்ளது.
அதேபோல் காதர்பாட்ஷா முத்துராமலிங்கத்தின் பெயர் பொறிக்கப்பட்ட சில்வர் பாத்திரங்களை விநியோகித்ததாகவும் கூறப்படுகிறது. தேர்தலை கருத்தில் கொண்டே இது போன்ற செயல்களில் திமுகவினர் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.
















