அஜித் பவார் விமான விபத்து சம்பவத்தில், விமானம் அவசர நிலையில் இருப்பதற்கான எந்த அறிவிப்பும் விமானியிடம் இருந்து கொடுக்கப்படவில்லை என்று விமான போக்குவரத்து துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏதேனும் ஏற்பட்டதா என்பது கருப்புப் பெட்டியை ஆய்வு செய்த பிறகே தெரியவரும் என்றும், விபத்து பகுதியில் தடயங்களைச் சேகரித்து, நேரில் பார்த்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















