வலிமையான நண்பரை இழந்துவிட்டதாக மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், அஜித் பவார் மரணம் தனக்கு ஒரு தனிப்பட்ட இழப்பு என்றும், ஒருபோதும் ஈடுசெய்ய முடியாத ஒன்று எனவும் கூறினார்.
இச்சம்பவம் மகாராஷ்டிரா மக்களுக்கும் மிகவும் வேதனையானது எனக் குறிப்பிட்ட ஃபட்னாவிஸ், மாநில அரசு சார்பில் 3 நாள் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
















