மதுரை விமான நிலையத்தில் உள்ளூர் மற்றும் சர்வதேச விமான சேவைகளை அதிகரிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
மக்களவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், மதுரையில் இருந்து பெங்களூருக்கு இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்றும், இதனை சரி செய்வதற்கான முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபடுமா எனவும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் மதுரை விமான நிலையம் முக்கியமான ஒன்று என தெரிவித்தார்.
மதுரை விமான நிலையத்தின் செயல்பாடுகளை அதிகரிப்பதற்கான முயற்சிகளின் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் கூறினார். மதுரை விமான நிலையத்தில் உள்ளூர் மட்டுமின்றி சர்வதேச விமான சேவைகளையும் அதிகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பதில் அளித்துள்ளார்.
















