மத்திய பட்ஜெட்டில் தொழில் நிறுவனங்களின் எதிர்பார்ப்பு என்ன? : "ரூஃப் டாப் சோலார் திட்டத்திற்கு மானியம் கிடைக்குமா? - சிறப்பு தொகுப்பு!
Jan 29, 2026, 08:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத்திய பட்ஜெட்டில் தொழில் நிறுவனங்களின் எதிர்பார்ப்பு என்ன? : “ரூஃப் டாப் சோலார் திட்டத்திற்கு மானியம் கிடைக்குமா? – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 29, 2026, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய பட்ஜெட் இன்னும் சில நாட்களில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், கோவை தொழில்துறையினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது… அவர்கள் எதிர்ப்பார்ப்பது என்ன என்பது குறித்து இந்த செய்தித்தொகுப்பில் பார்க்கலாம்….

பிப்ரவரி ஒன்றாம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சார்பில் 7 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய ஆய்வறிக்கை அளிக்கப்பட்டுள்ளது…

அதில் குறிப்பாக, பிரதமரின் “சூரிய கிரண்” திட்டத்தைப் போன்று, ரூஃப்டாப் சோலார் திட்டத்திற்கு 25 சதவிகிதம் மானியம் வழங்க வேண்டும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடன் இலக்குகளை அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கும் என்கிறார் கொடிசியா தலைவர் கார்த்திக்கேயன்.

CGTMSE திட்டத்தின் கீழ் உற்பத்தித் துறைக்கு கூடுதல் ஆதரவு வழங்க வேண்டும் என்றும், 25 கோடி ரூபாய் வரை 100% கடன் உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் 75% உத்தரவாதம் மட்டுமே வழங்கப்படுவதால் வங்கிகள் தயக்கம் காட்டுவதாகவும், இது உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பை நேரடியாக பாதிப்பதாகவும் கூறுகிறார்.

‘பவர் டெக்ஸ் இந்தியா’ திட்டத்தின் கீழ் சாதாரண விசைத்தறிகளை நவீன விசைத்தறிகளாகவும், ரேப்பியர் தறிகளாகவும் மாற்ற மத்திய அரசு வழங்கி வந்த மானியம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், இதுவரை சுமார் 50 சதவீத விசைத்தறிகள் மட்டுமே நவீனமயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பூபதி .

தமிழகத்தில் விசைத்தறிகளுக்கான மின் கட்டணம் சமீப காலமாக அதிக அளவில் உயர்த்தப்பட்டுள்ளதால், விசைத்தறியாளர்கள் கடும் பொருளாதார சுமையை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு, விசைத்தறிக் கூடங்களில் சோலார் பேனல்கள் அமைப்பதற்கு மத்திய அரசு 50 சதவீத மானியம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே, வரும் மத்திய பட்ஜெட்டில் ‘பவர் டெக்ஸ் இந்தியா’ திட்டத்தை மீண்டும் செயல்படுத்தினால் அதன்மூலம் விசைத்தறியாளர்களின் வாழ்வாதாரம் மேம்படும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது…

Tags: union budget 2026india budget 2026budget 2026 indiabudget 2026 stocksindian budget 2026budget 2026 sectorstax slabs budget 20262026 union budgetbudget 2026finance minister budget 2026budget 2026 gstunion budget 2026 expectationsbudget 2026 live
ShareTweetSendShare
Previous Post

போதைப்பொருள் கலாசாரத்தை ஒழிப்போம் என்று முதல்வர் கூறுவதே இல்லை- நயினார் நாகேந்திரன்

Next Post

EU உடனான வர்த்தக ஒப்பந்தம் காரணமாக தொழில் வளர்ச்சி பன்மடங்கு உயரப்போகிறது – கோத்தாரி நிறுவன தலைவர் கணிப்பு!

Related News

மக்கள் மாளிகையில் கம்பர் சிலை – ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார்!

உலகளாவிய மேலாதிக்க சக்திக்கு சரியான பதிலடி : இந்தியா.- EU ஒப்பந்தத்தை வரவேற்ற கனடா – சிறப்பு தொகுப்பு!

EU உடனான வர்த்தக ஒப்பந்தம் காரணமாக தொழில் வளர்ச்சி பன்மடங்கு உயரப்போகிறது – கோத்தாரி நிறுவன தலைவர் கணிப்பு!

போதைப்பொருள் கலாசாரத்தை ஒழிப்போம் என்று முதல்வர் கூறுவதே இல்லை- நயினார் நாகேந்திரன்

வரும் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 6.8 முதல் 7.2 சதவீதம் வரை உயரும் – பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்!

தேர்தல் நேரத்தில் போராடுவது ஃபேஷன் ஆகி விட்டதா? – அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

மத்திய பட்ஜெட்டில் தொழில் நிறுவனங்களின் எதிர்பார்ப்பு என்ன? : “ரூஃப் டாப் சோலார் திட்டத்திற்கு மானியம் கிடைக்குமா? – சிறப்பு தொகுப்பு!

15 வயதுக்குட்பட்டோர் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதிக்கும் மசோதா – பிரான்ஸ் நாடாளுமன்றம் ஒப்புதல்!

எஃப் 35 போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்கினால்… கனடாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

சென்னை அரசு கல்லூரியில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த விவகாரம் : கேண்டீன் மாஸ்டரிடம் போலீஸ் விசாரணை!

பொருளாதார ஆய்வறிக்கை : மக்களவையில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

வித்யா பிரதிஸ்டான் மைதானத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள் :அஜித் பவாரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்!

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

இன்றைய தங்கம் விலை!

மதுரை விமான நிலைய செயல்பாடுகளை அதிகரிக்க நடவடிக்கை – ராம் மோகன் நாயுடு பதில்!

நாட்டின் வளர்ச்சிக்கு எம்பிக்கள் பாடுபட வேண்டும் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies