15 வயதுக்குட்பட்டோர் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதிக்கும் மசோதாவுக்கு பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் சிறுவர்களின் மனநலம் மற்றும் உடல்நலனை கருத்தில்கொண்டு, 15 வயதுக்குட்பட்டோர் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கும் மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
இதற்கு 131 பேர் ஆதரவாகவும், 21 பேர் எதிராகவும் வாக்களித்த நிலையில், மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு கீழவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த வாக்கெடுப்பை வரவேற்றுள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், வரும் செப்டம்பர் மாதத்துக்குள் இந்த சட்டத்தை அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள இம்மானுவேல் மேக்ரான், பிரான்ஸ் நாட்டு குழந்தைகளின் மூளைகள் விற்பனைக்கு அல்ல என்றும், கணினி நிரலின் அடிப்படையில் அவர்களுக்கு கட்டளை பிறப்பிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், ஆஸ்திரேலியாவிற்கு பிறகு சிறார்களுக்கு சமூக வலைதள பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் 2-வது நாடாக பிரான்ஸ் மாறும். உயர்நிலைப் பள்ளிகளில் மொபைல் போன்களுக்குத் தடை விதிக்கும் விதியும் இந்த மசோதாவில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
















