மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் உள்ளிட்ட 5 பேரின் உயிரை பறித்த விமான விபத்தில், உயிரிழந்த பணிப்பெண் பிங்கி மாலி தனது தந்தையுடன் பேசிய கடைசி உரையாடல் வெளியாகி அனைவரையும் கண் கலங்க செய்துள்ளது.
விபத்து நடப்பதற்கு சற்றுநேரம் முன்பு தனது தந்தையை தொடர்புகொண்ட பிங்கி மாலி, தான் துணை முதல்வருடன் பாராமதிக்கு செல்வதாகவும், அவரை இறக்கிவிட்டு நாந்தேடுவுக்கு சென்றடைந்ததும் நாளை தங்களுடன் விரிவாக பேசுகிறேன் என்றும் உற்சாகமாக தெரிவித்துள்ளார். அதனை கேட்டு சம்மதம் தெரிவித்தபின் அவரது தந்தை இணைப்பை துண்டித்துள்ளார்.
ஆனால், அந்த “நாளை” ஒருபோதும் வராது என்பதை அறியத்தவறிய பிங்கி மாலியின் தந்தை தற்போது மகளை இழந்து தவித்து வருகிறார். இது தொடர்பாக பேசிய அவர் தொழில்நுட்ப ரீதியாக என்ன நடந்தது என்பது தனக்கு தெரியாது எனவும், ஆனால் தனது மகளை இழந்ததால் தான் முற்றிலுமாக உடைந்துவிட்டதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தார். அத்துடன், தனது மகளின் உடலை ஒப்படைத்தால் அவரது ஈமக்கிரியைகளை கண்ணியத்துடன் செய்ய விரும்புவதாக அவர் கூறியது காண்போரை கண்கலங்கச் செய்யது.
















