உக்ரைனில் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது ரஷ்யா நடத்திய டிரோன் தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர்.
ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் 4 ஆண்டுகளை எட்டிவிட்டது. போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இருப்பினும், ரஷ்யா தொடர்ந்து உக்ரைனுக்குள் நுழைந்து தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்நிலையில் உக்ரைனின் டினிப்ரோ பகுதியில் சுரங்கத் தொழிலாளர்கள் பணி முடிந்து வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, அவர்கள் சென்ற பேருந்து மீது ரஷ்யா டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் பேருந்து தீப்பிடித்து எரிந்து 15 பேர் உயிரிழந்தனர்.
காயமமடைந்த 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
















