ஈரானில் வசிக்கும் அமெரிக்க குடிமக்கள் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவுறுத்தியதால் ஈரானில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஈரான்-அமெரிக்கா இடையே மோதல் போக்கு வலுத்துள்ள சூழலில், அந்நாட்டை விட்டு அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க அரசின் உதவிக்காக காத்திருக்க வேண்டாம் என்றும், விமானங்கள் ரத்து செய்ய வாய்ப்புள்ளதால், விமான நிறுவனங்களிடம் உறுதி செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், ஈரானை விட்டு வெளியேற முடியாவிட்டால், பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடையுமாறும், உணவு, தண்ணீர், மருந்துகள் போன்ற அடிப்படை தேவைகளையும் இருப்பு வைத்துக் கொள்ளுமாறும் அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.
















