டிஜிட்டல் மோசடியில் குறைந்தளவு பணத்தை இழப்பவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்குவது குறித்து ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருகிறது.
தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக மக்களிடையே டிஜிட்டல் பணப்பரிமாற்றம் அதிகரித்துள்ளது. இதனால் டிஜிட்டல் மோசடிகளும் தினந்தோறும் அரங்கேறி வருகிறது.
இதனை தடுக்க மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி இணைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் டிஜிட்டல் மோசடிகளில் இருந்து வாடிக்கையாளர்களை பாதுகாக்க ரிசர்வ் வங்கி புதிய நடவடிக்கையை அறிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தில் சிறிய அளவில் ஏற்படும் இழப்புக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான வழிமுறைகள் வெளியிடப்படும் என கூறினார்.
















