மார்ச் ஒன்றாம் தேதி முதல் யுடிஎஸ் மொபைல் செயலி நிறுத்தப்படுவதாகவும், ரயில் ஒன் செயலியை பயன்படுத்த வேண்டும் என்றும் ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
இந்தியாவில் ரயில் சேவைகளை பெறுவதற்கு பல்வேறு செயலிகள் பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் யுடிஎஸ் செயலி முக்கியமானதாக உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பரில் இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டது.
இந்நிலையில் யுடிஎஸ் செயலி மார்ச் 1-ம் தேதி முதல் நிறுத்தப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதே நேரத்தில், ரயில் ஒன் செயலியை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
















