சபரிமலை கொடிமரத்திற்கு கிடைத்த தங்கத்திலும் முறைகேடு!
Oct 21, 2026, 08:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சபரிமலை கொடிமரத்திற்கு கிடைத்த தங்கத்திலும் முறைகேடு!

Manikandan by Manikandan
Feb 12, 2026, 02:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சபரிமலையில் கொடிமரத்திற்கு கிடைத்த தங்கத்திலும் முறைகேடு நடந்ததாக நடிகர்கள் மோகன்லால், சுரேஷ்கோபி உள்பட 27 பேரிடம் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு செய்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பதிக்கப்பட்டிருந்த தங்கத் தகடுகளில் இருந்து தங்கம் திருடப்பட்டதாக கூறப்படும் நிலையில் அபிஷேக நெய் விற்பனையிலும் லட்சக்கணக்கில் மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் சபரிமலையில் சில வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்ட புதிய கொடிமரத்திற்காக பக்தர்களிடம் இருந்து பெறப்பட்ட தங்கத்திலும் மோசடி நடந்தது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து விசாரணை நடத்தி ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் உடனடியாக விசாரணையை தொடங்கினர்.

பிரபல மலையாள நடிகர்களான மோகன்லால், சுரேஷ்கோபி, அவரது மகனும் நடிகருமான கோகுல், பிரபல இயக்குநரும், நடிகருமான ரஞ்சி பணிக்கர் உள்பட 27 பேர் கொடிமரத்திற்காக தங்கம் காணிக்கையாக கொடுத்துள்ளனர்.

சினிமா துறையில் இருந்து மட்டும் 8 பேர் தங்கம் கொடுத்துள்ளனர். ஆனால் தேவசம் போர்டின் பதிவேட்டில் பெயர் குறிப்பிடாமல் பக்தன் என்று மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது.

தங்கம் நன்கொடையாக கொடுத்தவர்களுக்கு ரசீதும் கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து மோகன்லால் உள்பட 27 பேரிடமும் எவ்வளவு தங்கம் கொடுத்தார்கள் என விசாரணை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Tags: gold scamscamsabarimalaSABARIMALA GOLDSabarimala flag treeSabarimala flag tree gold scam
Share
Tweet
SendShare
Previous Post

திமுகவின் தொமுச அலுவலகத்தில் இருதரப்பினரிடையே மோதல்!

Next Post

மாதாந்திர பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று நடை திறப்பு!

Related News

தேசமே முதன்மை என்ற உணர்வு அனைவரிடமும் இருக்க வேண்டும் : மோகன் பாகவத்

திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா – சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு!

விஜயதசமி பண்டிகை : குடியரசு தலைவர், பிரதமர் வாழ்த்து!

கிக்பாக்ஸிங் உலகக் கோப்பை போட்டியில் 6 பதக்கங்கள் – தாயகம் திரும்பிய தமிழக வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு!

தினமலர் சார்பில் அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி : 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்பு!

மறைந்த சடகோபன்-ஜி உடலுக்கு ஆர்எஸ்எஸ், பாஜக மூத்த தலைவர்கள் அஞ்சலி!

Load More

அண்மைச் செய்திகள்

இறுதிக்கட்டத்தில் இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம் – மார்கோ ரூபியோ

எடப்பாடியில் காலைக்கதிர் சார்பில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சி – குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்பு!

விரைவில் பாரிஸ் இஸ்லாமிய நகரமாக மாறிவிடும் – டிரம்ப் எச்சரிக்கை!

நாகர்கோவில் அருகே வனமாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சி!

இன்றைய தங்கம் விலை!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் நவராத்திரி விழா கோலாகலம்!

பேனர் வைப்பதில் தகராறு – தாராபுரம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்ளிட்ட 10 பேர் கைது!

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – அன்ன வாகனத்தில் அம்பாள் வீதி உலா!

தொகுதி மறுவரையறை மசோதா குறித்து பேச்ச்சுவார்த்தை – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தகவல்!

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் குறித்து சர்ச்சை கருத்து – இந்தியா கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies