தாங்கள் அங்கம் வகிக்கும் கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என நமது மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜெகநாத் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
நமது மக்கள் முன்னேற்றம் கழகத்தின் மாவட்ட மாநாடு தேனி பழனிசெட்டிப்பட்டியில் நடைபெற்றது. இதில் தலைவர் ஜெகநாத் மிஸ்ரா கலந்து கொண்டார்.
இதனைதொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் எங்கள் கட்சிக்கு கணிசமான வாக்குகள் இருக்கின்றது என்றும், ஒவ்வொரு தொகுதியிலும் 10 முதல் 2 லட்சம் வரை வாக்கு வங்கிகள் வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
அதனால் தாங்கள் அங்கம் வகிக்கும் கூட்டணி தான் மாபெரும் வெற்றி பெறும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
















