பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமங்களின் சார்பாக நடைபெறும் நட்சத்திர கலை விழாவின் இறுதிநாள் கொண்டாட்டத்தில் நடன இயக்குநரும், நடிகருமான பிரபுதேவா பங்கேற்று மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.
தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகத்தில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் மாணவர்களின் கலைத்திறனை ஊக்குவிக்கும் வகையில் 3 நாட்கள் ‘நட்சத்திர கலை விழா’ நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விழா கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
விழாவின் இறுதிநாளில் சிறப்பு விருந்தினராக நடன இயக்குனரும், நடிகருமான பிரபுதேவா கலந்து கொண்டு, பல்கலைக் கழக வேந்தர் சீனிவாசனின் கடின உழைப்பைப் பாராட்டிப் பேசினார்.
இதனையடுத்து, மாணவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, மேடையில் தனது பாணியில் அதிரடியாக நடனமாடி அசத்தினார். இதனைப் பார்த்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் ஆரவாரம் செய்து உற்சாகமடைந்தனர்.
















