இந்து மன்னருக்கு பெருகும் ஆதரவு - நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சி ?
Apr 2, 2026, 10:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்து மன்னருக்கு பெருகும் ஆதரவு – நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சி ?

Manikandan by Manikandan
Feb 15, 2026, 08:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நேபாளத்தில் இந்து மன்னர் ஞானேந்திர ஷாவின் ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என வலுவான குரல் ஒலிக்க தொடங்கியிருக்கிறது. மார்ச் 5-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் உள்ள நிலையில், மீண்டும் மன்னராட்சிக்கு ஆதரவு பெருக தொடங்கியிருக்கிறது.

நமது அண்டை நாடான நேபாளத்திற்கு, ஜனநாயகம் என்பது மிகவும் புதிது. 2008-ம் ஆண்டு மே 28-ஆம் தேதி நேபாளத்தில் மன்னராட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டு, கூட்டாட்சி ஜனநாயக நாடாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் 240 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த மன்னராட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அன்றைய தினத்தில் இருந்து நேபாளம் ஒரு புதிய அத்தியாயத்தை நோக்கி நகர்ந்தது.

இதன் பிறகு மன்னர் ஞானேந்திர ஷாவும் அவரது குடும்பமும் பொது வாழ்க்கையில் இருந்து விலகி இருந்தனர். ஆனால், Gen Z தலைமுறையினர், சர்மா ஒலி அரசுக்கு எதிராக நடத்திய போராட்டத்திற்கு பிறகு நிலைமை தலைகீழாக மாறத்தொடங்கியது. குறிப்பாக, மன்னராட்சி மீண்டும் வர வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்க தொடங்கியது. தனக்கான ஆதரவு பெருகி வருவதை உணர்ந்த ஞானேந்திர ஷா, மீண்டும் பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்க தொடங்கினார்.

இதனிடையே, நேபாளத்தில் வரும் மார்ச் 5-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே மன்னராட்சியை அமல்படுத்தி விட வேண்டும் என ஞானேந்திர ஷாவின் ஆதரவாளர்கள் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளனர்.

தலைநகர் காத்மாண்டுவில் உள்ள திரிபுவான் சர்வதேச விமான நிலையத்திற்கு ஞானேந்திர ஷா வந்து இறங்கியதும், அவரது ஆதரவாளர்கள் எழுப்பிய முழக்கம், மன்னராட்சிக்கு அடித்தளமிட்டிருப்பதை பார்க்க முடிகிறது. நேபாளத்தை காப்பாற்ற வேண்டும் என்றால், மீண்டும் மன்னராட்சி மலர வேண்டும் என அவர்கள் உதிர்த்த வார்த்தைகள் ஆளும் அரசை கதி கலங்க செய்துள்ளது.

இதனிடையே நேபாள பிரதமர் சுசிலா கார்க்கி நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள அழைப்பில், பொதுத்தேர்தலில் ஆர்வத்துடன் வாக்களிக்குமாறு கூறியுள்ளார். நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடுவது தேர்தல் நடைமுறைதான் என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார். பொதுத்தேர்தல் அமைதியாக நடைபெற அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னாள் மன்னர் ஞானேந்திர ஷாவுக்கு மீண்டும் அதிகாரத்திற்கு வர விருப்பம் இல்லை. அவருக்கும் அதிகாரத்தை மீண்டும் தக்க வைக்க வேண்டும் என்ற ஆசை இருக்க தான் செய்திறது. அதன் காரணமாகவே மன்னராட்சிக்காக குரல் கொடுக்கும் போராட்டக்குழுக்களுக்கு அவர் ஆதரவு வழங்குவதை பார்க்க முடிகிறது. இதையெல்லாம் கணக்கிட்டு பார்த்தால் மார்ச் 5-க்கு பிறகு ஆளும் அரசு தொடருமா அல்லது மன்னராட்சி மலருமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Tags: Hindu Kingnepalnepal electionMarch 5Gyanendra Shah
ShareTweetSendShare
Previous Post

டி-20 லீக் போட்டி – இந்தியா Vs பாகிஸ்தான் போட்டி அல்ல ‘போர்’

Next Post

ராகுல் காந்தியின் பொய் உற்பத்தி தொழிற்சாலையை மக்கள் அடையாளம் கண்டுவிட்டனர் – அமித் ஷா விமர்சனம்!

Related News

ஆதவ் அர்ஜுனாவின் கார் மோதி காவலருக்கு கால் முறிவு!

மேற்குவங்கத்தில் 15 நாட்கள் தங்கி தீவிர பிரச்சாரம் – அமித்ஷா அறிவிப்பு!

ஈரோடு : முதலமைச்சர் ஸ்டாலின் பரப்புரை கூட்டத்திற்கு வந்த முதியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதியில் இந்தியா வரலாற்று சாதனை!

தவெக வேட்பாளர்களை ஆதரித்து விஜய் வரும் 4ம் தேதி பிரச்சாரம் !

53 ஆண்டுகளுக்கு பிறகு நிலவுக்கு மனிதர்களை அனுப்பிய நாசா !

Load More

அண்மைச் செய்திகள்

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!

மதுரவாயல் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பென்ஜமின் தீவிர வாக்கு சேகரிப்பு!

பிரதமர் மோடியின் ஆதரவோடு தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சியமையும் – அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ!

விருதுநகர் : காட்டுத்தீ பரவியதில் 40 ஆடுகள் தீயில் கருகி இறந்த சோகம்!

பழனி : ரயில்வே கேட் மூடல்-ஆம்புலன்ஸ், பிற வாகனங்கள் அணிவகுத்து நின்றன!

திருச்சி : மதுரை காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா – தீர்த்தக்குட ஊர்வலம்!

இன்றைய தங்கம் விலை!

பங்குனி உத்திரம் – வாலீஸ்வரர் கோயிலில் சிறப்பு அபிஷேகம்!

பெரம்பலூர் : பாலமுருகன் கோயில் பங்குனி உத்திர பால்குட ஊர்வலம்!

ராணிப்பேட்டை சோதனை சாவடியில் அமைச்சர் துரைமுருகன் கார் – வணக்கம் வைத்து அனுப்பி வைத்த போலீசார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies