53 ஆண்டுகளுக்கு பிறகு நிலவுக்கு மனிதர்களை அனுப்பிய நாசா !
Oct 17, 2026, 04:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

53 ஆண்டுகளுக்கு பிறகு நிலவுக்கு மனிதர்களை அனுப்பிய நாசா !

Manikandan by Manikandan
Apr 2, 2026, 12:31 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

53 ஆண்டுகளுக்கு பிறகு நிலவில் ஆய்வு செய்வதற்காக ஆர்டெமிஸ்-2 என்ற விண்கலத்தை நாசா வெற்றிகரமாக விண்ணிற்கு அனுப்பியுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து 32 அடுக்கு உயரமுள்ள ராக்கெட் சீறிப்பாய்ந்தது.

இந்த விண்வெளிப் பயணத்தில் நாசா விண்வெளி வீரர்களான ரீட் வைஸ்மேன், விக்டர் குளோவர், கிறிஸ்டினா கோச் மற்றும் கனடா விண்வெளி வீரர் ஜெர்மி ஹேன்சன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்பவும், செவ்வாய் கிரகத்திற்கு விண்வெளி வீரர்களை அனுப்பவும், நாசா மேற்கொண்டு வரும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த விண்கலம் ஏவப்பட்டுள்ளது.

இவர்கள் நிலவைச் சுற்றி வந்து மீண்டும் பூமிக்குத் திரும்பும் வகையில், 10 நாட்களுக்கு பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.

விண்வெளி வீரர்கள் முதல் இரண்டு நாட்களை புவியின் உயர் வட்டப்பாதையில் கழிப்பார்கள் என்றும் அங்கு ஓரியன் விண்கலத்தின் உயிர் காக்கும் வசதிகள், உந்துவிசை, வழிகாட்டுதல் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளை முழுமையாகச் சோதிப்பார்கள் என்றும் நாசா தெரிவித்துள்ளது.

இந்தச் சோதனைகளுக்குப் பிறகு, ‘டிரான்ஸ்லூனார் இன்ஜெக்ஷன்’ எனும் முக்கிய இன்ஜின் மூலம் விண்கலம் நிலவை நோக்கிய பாதையில் செலுத்தப்படும் என்றும் ஓரியன் விண்கலம் நிலவின் பின்புறம் சென்று, நிலவு மற்றும் பூமியின் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி மீண்டும் பூமியை நோக்கித் திரும்பும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்கலம் மணிக்கு சுமார் 40 ஆயிரத்து 233 கி.மீ வேகத்தில் வளிமண்டலத்திற்குள் நுழைந்து, பசிபிக் பெருங்கடலில் வந்து இறங்கும் என நாசா தெரிவித்துள்ளது.

Tags: Artemis MissionDeep Space MissionOrion SpacecraftMars Mission PlanMoon MissionSpace TechnologyLunar OrbitHigh Speed ReentryHuman SpaceflightPacific Ocean SplashdownReid WisemanGlobal Space NewsVictor GloverSpace explorationChristina KochNASA MissionJeremy HansenKennedy Space CenterCanada AstronautFlorida LaunchTrans Lunar Injection
Share
Tweet
SendShare
Previous Post

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!

Next Post

தவெக வேட்பாளர்களை ஆதரித்து விஜய் வரும் 4ம் தேதி பிரச்சாரம் !

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் மீதான முன் ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

பழனியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies