பலுாச் விடுதலைப்படை தற்கொலைப்படை தாக்குதல் - 45 பாகிஸ்தான் ராணுவத்தினர் பலி - சிறப்பு தொகுப்பு!
Oct 17, 2026, 05:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பலுாச் விடுதலைப்படை தற்கொலைப்படை தாக்குதல் – 45 பாகிஸ்தான் ராணுவத்தினர் பலி – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 18, 2026, 06:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மஸ்துங் (Mastung) பகுதியில் பாகிஸ்தான் ராணுவ வாகனங்கள் மீது நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தாக்குதலில் 45 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக பலுசிஸ்தான் விடுதலைப் படை அறிவித்துள்ளது.அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

பலுசிஸ்தானில் உள்ள மஸ்துங் (Mastung) பல ஆண்டுகளாகவே பலூச் விடுதலை இராணுவத்தின் தாக்குதல்களின் மையமாக இருந்து வருகிறது. 2018-ல் அப்பகுதியில் தேர்தல் பேரணியில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 128 பேர் உயிரிழந்தனர். 2023-ல் மசூதிக்கு அருகில் நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் 55-க்கும் அதிகமானோர் மரணமடைந்தனர்.

பலூசிஸ்தானின் மஸ்துங் மாவட்டத்தில் நடந்த பாகிஸ்தான் ராணுவ அணிவகுப்பு மீது ‘பலூச் விடுதலைப் இராணுவத்தினர் நடத்திய கொடூரத் தாக்குதலில் 45 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது இந்த ஆண்டில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் மீது நடத்தப்பட்ட மிகக் கொடிய தாக்குதல்களில் ஒன்றாக கருதப் படுகிறது.

தனிப்பட்ட தாக்குதல்களில் இருந்து, பல பிரிவுகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பதுங்கித் தாக்குதல்கள், கூடுதல் படைகள் மீதான தாக்குதல்கள் மற்றும் நீடித்த துப்பாக்கிச் சண்டைகள் என பிரிவினைவாத அமைப்பு தனது அதிநவீன நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

இது குறித்து எந்தஅதிகாரப்பூர்வ தகவல்களையும் தெரிவிக்காத பாகிஸ்தான் அரசு, தாக்குதலுக்குப் பிறகு, சிக்கிக்கொண்ட வீரர்களை மீட்கவும் அப்பகுதியைப் பாதுகாக்கவும் தாக்குதல் ஹெலிகாப்டர்களையும் (gunship helicopters) கூடுதல் படைகளையும் மஸ்துங் பகுதிக்கு அனுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

BLA-வின் செய்தித் தொடர்பாளர் ஜியந்த் பலூச் வெளியிட்ட அறிக்கையில், தங்கள் அமைப்பின் உயர்தர “ஃபதா படைப்பிரிவு” (Fatah Squad) பாகிஸ்தான் ராணுவ அணிவகுப்பு மீது தாக்குதல் நடத்தியது மட்டுமல்லாமல், அப்பகுதிக்கு விரைந்து வந்த கூடுதல் படைகளையும் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக கூறப் பட்டுள்ளது.

மீட்புப் பணிகள் மற்றும் தேடுதல் வேட்டை நடைபெற்றதால் பலூசிஸ்தானை சிந்து மாகாணத்துடன் இணைக்கும் பாகிஸ்தானின் மிக முக்கியமான சாலைத் தொடர்புகளில் ஒன்றான குவெட்டா-கராச்சி தேசிய நெடுஞ்சாலையை பாதுகாப்புப் படைகள் மூடியதால் நீண்ட போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நூற்றுக்கணக்கான பயணிகள் வழியில் சிக்கியுள்ளனர்.

காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க குவெட்டாவில் உள்ள சிவில் மருத்துவமனை, கௌஸ் பக்ஷ் ரைசானி நினைவு மருத்துவமனை மற்றும் அருகிலுள்ள பல மருத்துவ மையங்களில் பலூசிஸ்தான் அரசு அவசர நிலையை அறிவித்தது.

பாகிஸ்தானின் ராணுவ வாகன அணிவகுப்புகள், பாதுகாப்பு தளங்கள் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களை மீண்டும் மீண்டும் குறிவைத்து பலூச் விடுதலை இராணுவத்தினர் தாக்கி வருகின்றனர். இது பலுசிஸ்தானில் பாகிஸ்தான் எதிர்கொள்ளும் வளர்ந்து வரும் பாதுகாப்பு சவாலை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது.

Tags: pakistanBalochistan provinceBalochistan Liberation Army45 Pakistani soldiers killedMastung areasuicide attack near mosque.
Share
Tweet
SendShare
Previous Post

நீட் தேர்வு முடிவு – முதல் 100 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த 9 மாணவர்கள் இடம் பிடித்தனர்!

Next Post

புவிசார் அரசியலில் திருப்பம் : தனித்து விடப்பட்ட அமெரிக்கா : இந்தியா தலைமையில் உருவாகும் புதிய வலுவான கூட்டணிகள் – சிறப்பு தொகுப்பு!

Related News

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு!

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies