நாகர்கோவில் சிறையில் உயிரிழந்த சபரி வர்மனின் உடல் தகனம்!
Oct 17, 2026, 01:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாகர்கோவில் சிறையில் உயிரிழந்த சபரி வர்மனின் உடல் தகனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 18, 2026, 06:56 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாகர்கோவில் சிறையில் உயிரிழந்த மாற்றுத்திறனாளி சபரி வர்மனின் உடல் நீண்ட போராட்டத்திற்கு பிறகு தகனம் செய்யப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், ஈத்தங்காடு பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மன் குட்கா விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் திடீரென உயிரிழந்தார். அவரது உடலில் 19 இடங்களில் காயங்கள் இருந்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. இந்த வழக்கில் சிறைக் காவலர்கள் 3 பேர் மற்றும் சிறை கைதிகள் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதேநேரம் வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரியும், உரிய நிவாரணம் கேட்டும் சபரி வர்மனின் உடலை வாங்க மறுத்து குடும்பத்தினர் கடந்த 5 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, அமைச்சர்கள் ஸ்ரீநாத், ராஜேஷ்குமார், மாவட்ட ஆட்சியர் பிரதாப் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஆகியோர் சபரிவர்மனின் குடும்பத்தினரை சந்தித்துப் பேசினர்.

அப்போது, சபரி வர்மன் குடும்பத்திற்கு அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை மற்றும் தற்காலிக அரசுப் பணி ஆணையை அமைச்சர்கள் வழங்க முன்வந்தனர். இதனை நிராகரித்துவிட்ட குடும்பத்தினர், சபரி வர்மனின் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட வீடியோவை மறு ஆய்வு செய்த பிறகே அவரது உடலை பெறுவோம் என்று தெரிவித்தனர்.

பின்னர், வழக்கறிஞர்கள் மற்றும் ‘பப்ளிக் வாய்ஸ்’ அமைப்பு பிரேத பரிசோதனை வீடியோவை ஆய்வு செய்த பிறகு, சபரி வர்மனின் அக்கா கெளதமி உடலைப் பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்தார். இதனையடுத்து சபரிவர்மனின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, சபரிவர்மனின் உடல் அமரர் ஊர்தியில் ஏற்றப்பட்டு சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டது. அப்போது அமரர் ஊர்தியை தடுத்து நிறுத்திய கிராம மக்கள், சபரி வர்மன் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டிய இழப்பீடு மற்றும் நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும் எனவும், அதுவுரை உடலை அடக்கம் செய்ய விடமாட்டோம் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்கொண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, கோட்டாட்சியர் செந்தில்வேல் முருகன், சபரி வர்மனின் மனைவி ஆனந்தவல்லியிடம் அரசு வழங்கிய நிவாரணம் மற்றும் பணி நியமன ஆணையை வழங்கினார். பின்னர், போராட்டம் கைவிடப்பட்டு சபரிவர்மனின் உடல் தகனம் செய்யப்பட்டது.

Tags: kanyakumariSabari VarmanNagercoil prisonSabari Varman last ridesprolonged protest.Eethangaduselling Gutkha
Share
Tweet
SendShare
Previous Post

பழனி கோயில் நில பத்திரப்பதிவு விவகாரம் – சார் பதிவாளருக்கு முன்ஜாமின்!

Next Post

சென்னை பூங்கா உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட 75 ரயில் நிலையங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் மீதான முன் ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

பழனியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies