பழனி கோவில் நில பதிவு விவகாரம் - சிபிசிஐடி விசாரணை தீவிரம்!
Oct 16, 2026, 11:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பழனி கோவில் நில பதிவு விவகாரம் – சிபிசிஐடி விசாரணை தீவிரம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 17, 2026, 07:52 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பழனி கோவிலுக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்த வழக்கில், சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தேவஸ்தான கட்டுப்பாட்டில் இருந்த 1 ஏக்கர் 40 சென்ட் நிலத்தை, நீதிமன்ற உத்தரவை மீறி சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலக டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் போலீசார், பழனி அடிவாரம் கிரி வீதியில் உள்ள தேவஸ்தான தலைமை அலுவலகத்தில் விசாரணை நடத்தினர். அங்குள்ள நிலங்கள் பிரிவு மற்றும் முக்கிய ஆவணக் காப்பகங்களிலும் விசாரணை நடைபெற்றது. ​

நில விவகாரம் தொடர்பாக கோயில் நிர்வாகம் சார்பில் பதிவுத்துறைக்கு அனுப்பப்பட்ட ஆட்சேபனை கடிதங்கள், நீதிமன்றத் தீர்ப்புகளின் அசல் பிரதிகள் மற்றும் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனால் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத பத்திரப்பதிவு விவரங்களை சிபிசிஐடி போலீசார் ஆய்வு செய்தனர்.

மேலும், திருக்கோயில் நிலங்கள் பிரிவில் உள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிமும் வாக்குமூலம் பெற்றனர்.

பழனி கோயில் நில மோசடி வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்ட நிலையில் புதிய எஃப்.ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பழனி தேவஸ்தான தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். இவை வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டநிலையில், சிபிசிஐடி போலீசார், புதிய முதல் தகவல் அறிக்கையை முறைப்படி பதிவு செய்து, வழக்கை தங்களது விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.

அலுவலக சோதனையை தொடர்ந்து, திருஆவினன்குடி கோயிலுக்குப் பின்புறம் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்திற்கு போலீசார் நேரடியாகச் சென்று அங்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிலத்தின் எல்லைப் பகுதிகளை கள ஆய்வு செய்தனர்.

பழனி கோயிலுக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்த வழக்கில், பழனி சார்பதிவாளர் அலுவலகத்திலும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.

கடந்த 6-ஆம் தேதி, தற்காலிகப் பொறுப்பு சார்பதிவாளராக இருந்த ஜஸ்டின் மணிகண்டன் மேற்கொண்ட அந்தச் சட்டவிரோதப் பதிவு விவரங்களின் அசல் கணினிப் பதிவுகள் மற்றும் ஆவணக் காப்பகக் கோப்புகளை சிபிசிஐடி அதிகாரிகள் சரிபார்த்து, தங்களது கோப்புகளில் பதிவு செய்தனர்.

மேலும், பணியில் இணைந்துள்ள சார்பதிவாளர் மற்றும் அங்குள்ள அலுவலகப் பணியாளர்களிடமும் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

Tags: palani templeCB-CID policeCB-CID police investigationpalani temple land issue
Share
Tweet
SendShare
Previous Post

நாகர்கோவில் சபரி வர்மன் உயிரிழந்த விவகாரம் – தென்தாமரைக்குளம் எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்!

Next Post

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய பதிவுத்துறை டிஐஜி ஆனந்துக்கு பதவி உயர்வு வழங்க மறுத்தது சரிதான் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் மீதான முன் ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

பழனியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies