முறிந்த ஒப்பந்தத்தால் உக்கிரமடையும் ஈரான் போர் : மத்தியஸ்தராக செயல்பட்ட பாகிஸ்தான் முகத்தில் கரி - சிறப்பு தொகுப்பு!
Aug 31, 2026, 12:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முறிந்த ஒப்பந்தத்தால் உக்கிரமடையும் ஈரான் போர் : மத்தியஸ்தராக செயல்பட்ட பாகிஸ்தான் முகத்தில் கரி – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 16, 2026, 08:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்காவும், ஈரானும் மீண்டும் போரை தொடங்கியுள்ள நிலையில் மத்தியஸ்தராக செயல்பட்ட பாகிஸ்தானின் நிலை பரிதாபத்துக்கு உரியதாக மாறியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

மத்திய கிழக்கில் மட்டும் பாதிப்பை ஏற்படுத்தாமல் உலகம் முழுவதும் கடுமையான பொருளாதா சரிவை ஈரான் போர் ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச கடல்சார் வணிகம் மற்றும் எண்ணெய் விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் அதிகரித்துள்ளது.

ஐநா சபையோ, சீனாவோ, ரஷ்யாவோ மற்ற ஐரோப்பிய நாடுகளோ முன்னெடுக்காத இந்த போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு எகிப்து மற்றும் துருக்கி மறைமுகமாக துணை நின்றாலும் பாகிஸ்தானே முக்கிய மத்தியஸ்தராக செயல்பட்டது.

இதனாலேயே பேச்சுவார்த்தைகள் இஸ்லாமாபாத்தில் நடைபெற்றன என்றாலும் முதல்கட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படாமல் முடிவடைந்தது.

பிறகு ஒருவழியாக 14 அம்சங்கள் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஒப்புக்கொண்ட அமெரிக்காவும் ஈரானும் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தத்தில் முக்கிய மத்தியஸ்தராக செயல்பட்ட பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கையெழுத்திட்டுள்ளார்.

நிலையற்ற போர்நிறுத்தத்தை நீட்டிப்பதற்கும் நீண்டகால அமைதிக்கான பாதையை உருவாக்குவதற்கும் இந்த ஒப்பந்தம் பயன்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதலை நடத்தியது.

ஒப்புக்கொண்ட ஒப்பந்த விதிகளை ஈரான் மீறியதால், இனி பேசிப் பயனில்லை என்று கூறிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒப்பந்தம் ரத்து செயப்படுவதாக அறிவித்து அந்நாட்டின் மீது ராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளார்.

பாகிஸ்தான், கத்தார் மற்றும் ஓமன் உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து மத்தியஸ்த பணியில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்ட ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய், கடந்த ஜூன் மாதத்தில் கையெழுத்தான ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறுவதாக ஈரான் கருதும் செயல்களுக்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

அதன்படி,ஈரானும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இந்நிலையில் போரை நிறுத்தத்துக்கான ஒப்பந்தத்தை தனது இராஜதந்திர வெற்றியாக கொண்டாடிய பாகிஸ்தான், மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்தியதில் உலக நாடுகளின் பாராட்டையும் எதிர்பார்த்தது. ஆனால் ஒப்பந்தத்தை மீறிய ஈரானும், ஒப்பந்தத்தை ரத்து செய்த அமெரிக்காவும் பாகிஸ்தானை ஒரு இக்கட்டான சூழலில் தள்ளியுள்ளது.

இதன் விளைவாக கடின உழைப்பால் எட்டப்பட்ட அமைதி முயற்சிகள் வீணாகிவிட அனுமதிக்க வேண்டாம் என்று பிரதமர் ஷெரீப், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சியுடன் பேசிய பாகிஸ்தானின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தார் போர் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு பேச்சுவார்த்தை மட்டுமே “சாத்தியமான ஒரே வழி” என்று மீண்டும் தெரிவித்துள்ளார்.

ஈரான் போரில் பேச்சுவார்த்தைகளும் ஒப்பந்தங்களும் முறிவுக்கு வருவது இது மூன்றாவது முறையாகும்.

ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதும் அதைச் செயல்படுத்துவதும் வேறுபட்ட விஷயங்கள் என்பதை புரியாமல் செயல்பட்டதால் தான் மத்தியஸ்தராக பாகிஸ்தான் தோல்வியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஹார்முஸ் ஜலசந்தியின் கட்டுப்பாட்டை விட்டுக்கொடுக்க முடியாது என்று ஈரானும், மீட்டெடுப்போம் என்று அமெரிக்காவும் கறாராக நிற்பதுதான் அடிப்படை சிக்கல். இதற்கு தீர்வு காணாமல் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை இருநாடுகளுமே மீறியுள்ளன.

ஹார்முஸ் ஜலசந்தி வழி போக்குவரத்துக்கு 20 சதவீத கட்டணம் வசூலிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ள நிலையில், விட்டுக்கொடுக்க தயாராக இல்லை என்பதையே ஈரானின் தாக்குதல்கள் காட்டுகின்றன.

இரு தரப்பும் போரைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் போர் நிறுத்தத்துக்கு இனி பாகிஸ்தானால் எதுவும் செய்ய முடியாது என்று புவி சார் அரசியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

 

Tags: us iran war liveiran war updateiran war latestisrael us iran waramerica vs iran wariran warStrait of HormuzIran-US wariran war news
Share
Tweet
SendShare
Previous Post

முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம் – இபிஎஸ் நடவடிக்கை!

Next Post

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்; நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி

Related News

உஸ்பெகிஸ்தான் சென்ற பிரதமர் மோடி; உயரிய விருது வழங்கி கெளரவிப்பு

தோல்வியில் முடிந்த மெக்கா ஒப்பந்தம் : ஆமை புகுந்த வீடான பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

சேலம் ராஜகணபதி கோயில் கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

நேபாள வெள்ளம் – அடையாளம் தெரியாத உடல்களின் டிஎன்ஏ மாதிரிகளை சேகரிக்க முடிவு!

சேலையை கொடுத்து காப்பாற்றியவர்கள் சிவன் – பார்வதியாக தெரிந்தனர் – நேபாள வெள்ளத்தில் தப்பித்த பெண் நெகிழ்ச்சி!

நேபாள வெள்ளம், எங்கும் பிணக்குவியல் : மாயமான 3,000 பேர், கதறும் உறவுகள் -வேதனை தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாள எல்லையில் ஏரி உடையும் அபாயம் – சீனா எச்சரிக்கை!

பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட்டால் முஸ்தபாவிற்கு கண்ணீர் வருவது ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

உண்மையான ஹிந்து யார்? – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் விளக்கம்!

5 மாதங்களுக்கு முன்பே வெள்ள அபாய எச்சரிக்கை : புறக்கணித்த நேபாள அரசு – சிறப்பு கட்டுரை!

பிரதமர் ஆசையில் விஜய் பலியாகிவிடக் கூடாது – அர்ஜுன் சம்பத்

அதுவும் கொள்ளை தான் – ஹெச்.ராஜா விமர்சனம்!

லஞ்சம் கேட்கும் பணியாளர் மீது உடனடி நடவடிக்கை – அமைச்சர் வெங்கட ரமணன் எச்சரிக்கை!

வேற்றுமையில் ஒற்றுமையை உலகிற்கு உணர்த்துவதே பாரதத்தின் நோக்கம் – மோகன் பாகவத்

மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும், மனிதநேயம் ஒன்றுதான் – மோகன் பாகவத்

உஸ்பெகிஸ்தான் சென்றடைந்த பிரதமர் மோடி; உற்சாக வரவேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies