முல்லை பெரியாரில் கழிவு நீர் கலக்கும் விவகாரம் : கம்பம் தொகுதி எம்.எல்.ஏ ஜெகநாத் மிஸ்ரா ஆய்வு!
Aug 30, 2026, 03:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முல்லை பெரியாரில் கழிவு நீர் கலக்கும் விவகாரம் : கம்பம் தொகுதி எம்.எல்.ஏ ஜெகநாத் மிஸ்ரா ஆய்வு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 16, 2026, 08:05 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தென் தமிழக மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்தின் ஜீவாதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாற்றில் கடந்த 40 ஆண்டுகளாக கழிவுநீர் கலப்பதாக பொதுமக்களும், விவசாயிகளும் தொடர்ந்து புகார் தெரிவித்து வரும் நிலையில்,கம்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா நேரில் ஆய்வு செய்தார்.

தமிழக–கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணை, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், இலட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களின் பாசன ஆதாரமாகவும் விளங்கி வருகிறது.

இந்த நிலையில், அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் ஜீரோ பாயிண்ட் பகுதியில் உள்ள குமுளி, தேக்கடி, ஆணவச்சல், அட்டப்பள்ளம், ஒண்ணாம் மயில், வள்ளியகண்டம், மன்னாங்குடி உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் தங்கும் விடுதிகள், ரிசார்ட்டுகள், குடியிருப்புகள் மற்றும் பொது கழிப்பிடங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் முல்லைப் பெரியாற்றில் நேரடியாக கலப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து தமிழக முதல்-அமைச்சர் விஜய் உத்தரவின் பேரில், நீர்ப்பாசனத்துறை அமைச்சர் என். ஆனந்த், கேரள மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சர் மான் ஜோசப்பை தொடர்புகொண்டு, முல்லைப் பெரியாற்றில் கழிவுநீர் கலப்பதை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்த சூழலில், கம்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா  அதிகாலை குமுளி, தேக்கடி, ஆணவச்சல், அட்டப்பள்ளம் மற்றும் ஜீரோ பாயிண்ட் பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது ஆற்றில் கழிவுநீர் கலக்கும் இடங்களை பார்வையிட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்,
பின்னர்  செய்தியாளர்களிடம் பேசிய அவர், தென் தமிழக மக்களின் உயிர்நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணை நீரில், வீடுகள், தங்கும் விடுதிகள், ரிசார்ட்டுகள் மற்றும் பொது கழிப்பிடங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நேரடியாக கலப்பது மிகவும் வேதனையளிப்பதாக தெரிவித்தார்.

எவ்வித மனசாட்சியும் இல்லாமல் குடிநீரில் எப்படி கழிவு நீரை கலக்க மனம் வந்தது என்றும்,  இந்த நீரை தமிழகத்தின் 5 மாவட்ட மக்கள் குடிநீராகவும், விவசாயத்திற்கும் பயன்படுத்தி வருகின்றனர் என்றும் அவ்ர கூறினார்.

இதனால் பொதுமக்களின் உடல்நலன், சுற்றுச்சூழல் மற்றும் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு தலைமதகு பகுதியில் உள்ள குமுளி, தேக்கடி, ஆணவச்சல், அட்டப்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பல ஆண்டுகளாக ஆற்றில் கலப்பதை கடந்த ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளாமல் சென்றதால் தான் இந்த நிலை இன்று ஏற்பட்டுள்ளது

தமிழகத்திற்கு வரும் ஆற்று நீர் மாசடைந்து கழிவுநீராக மாறுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனால் மண்வளம் பாதிக்கப்படுவதோடு, தொற்றுநோய்கள் பரவும் அபாயமும் அதிகரித்துள்ளது. இதை பார்க்கும் ஒவ்வொரு தமிழக மக்களின் மனதும் வேதனை அடைகிறது.

எனவே, கேரள அரசு மற்றும் சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக தலையிட்டு முல்லைப் பெரியாற்றில் கழிவுநீர் கலப்பதை முழுமையாக தடுக்க வேண்டும். கழிவுநீரை சுத்திகரிப்பு செய்தாலும் அந்த நீரை உங்களின் பயன்பாட்டுக்கு வைத்துக் கொள்ளுங்கள் ஆனால் எந்தச் சூழ்நிலையிலும் அந்த கழிவுநீர் முல்லைப் பெரியாற்றில் கலக்க அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தமிழக மக்களின் குடிநீர் உரிமையையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க கேரள அரசு போர்க்கால அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுத்து நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும் என ஜெகநாத் மிஸ்ரா கேட்டுக்கொண்டார்.

Tags: Jaganath Misra nspection.Jaganath MisraP.L.A. Jaganath Misra mlaMullaperiyar RiverCumbum constituency
Share
Tweet
SendShare
Previous Post

செமிகண்டக்டர் துறை வளர்ச்சிக்காக ரூ. 1,27,500 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Next Post

ஓசூரில் சட்ட விரோதமாக தங்கியருந்த வங்க தேசத்தினர் 73 பேர் சுற்றி வளைப்பு!

Related News

நேபாள வெள்ளம், எங்கும் பிணக்குவியல் : மாயமான 3,000 பேர், கதறும் உறவுகள் -வேதனை தொகுப்பு!

நேபாள எல்லையில் ஏரி உடையும் அபாயம் – சீனா எச்சரிக்கை!

பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட்டால் முஸ்தபாவிற்கு கண்ணீர் வருவது ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

உண்மையான ஹிந்து யார்? – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் விளக்கம்!

5 மாதங்களுக்கு முன்பே வெள்ள அபாய எச்சரிக்கை : புறக்கணித்த நேபாள அரசு – சிறப்பு கட்டுரை!

பிரதமர் ஆசையில் விஜய் பலியாகிவிடக் கூடாது – அர்ஜுன் சம்பத்

Load More

அண்மைச் செய்திகள்

அதுவும் கொள்ளை தான் – ஹெச்.ராஜா விமர்சனம்!

லஞ்சம் கேட்கும் பணியாளர் மீது உடனடி நடவடிக்கை – அமைச்சர் வெங்கட ரமணன் எச்சரிக்கை!

வேற்றுமையில் ஒற்றுமையை உலகிற்கு உணர்த்துவதே பாரதத்தின் நோக்கம் – மோகன் பாகவத்

மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும், மனிதநேயம் ஒன்றுதான் – மோகன் பாகவத்

உஸ்பெகிஸ்தான் சென்றடைந்த பிரதமர் மோடி; உற்சாக வரவேற்பு

நேபாள வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வங்கி லாக்கரில் இருந்து 93 லட்சம் கொள்ளை – 29 பேர் கைது!

சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டு குறித்த தவெக எம்எல்ஏ-வின் பேச்சு : அதிமுக கண்டனம்!

4 நாள் அரசு முறைப்பயணம் – உஸ்பெகிஸ்தான் புறப்பட்டார் பிரதமர் மோடி!

இன்றைய தங்கம் விலை!

டி.என்.பி.எல்.கிரிக்கெட் தொடர் – சாம்பியன் பட்டம் வென்றது கோவை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies