தென் சீன கடலுக்கு உரிமை கொண்டாடும் சீனா : ஜப்பான் தூதரை நேரில் அழைத்து விளாசல் சிறப்பு தொகுப்பு!
Aug 30, 2026, 11:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தென் சீன கடலுக்கு உரிமை கொண்டாடும் சீனா : ஜப்பான் தூதரை நேரில் அழைத்து விளாசல் சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 15, 2026, 02:12 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தென் சீன கடலுக்கு உரிமை கொண்டாடும் சீனா, இந்த விவகாரத்தில் ஜப்பான் தூதரை நேரில் அழைத்துக் கண்டனம் தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் கடல்சார் வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் தென் சீன கடலுக்கு சீனா உரிமை கொண்டாடுவதன் பின்னணி என்ன? அதனால் சர்வதேச நீதிமன்றம் விதித்த தீர்ப்பு என்ன? விரிவாக பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்…

சீனாவின் தென் பகுதியில் அமைந்திருக்கும் தென் சீன கடல் வழியாக சர்வதேச அளவில் ஆண்டுதோறும் மூன்றில் ஒரு பங்கு கடல்வழி வர்த்தகம் நடைபெறுகிறது.

ஈரான், ஓமன் இடையே உள்ள ஹோர்மூஸ் நீரிணையைப் போல முக்கியத்துவம் வாய்ந்த, பரந்த அளவிலான தென் சீன கடலுக்கு ஆண்டாண்டு காலமாக உரிமை கொண்டாடும் சீனா, அந்தக் கடல் வழியாக செல்லும் பிற நாடுகளின் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது.

இதுமட்டுமன்றி, தென் சீன கடலில் தனது ரோந்து கப்பல்களை அனுப்பி உளவுபார்ப்பது, கடற்படை வீரர்களுக்குப் பயிற்சியளிப்பது என இந்தப் பிராந்தியத்தை எப்போதும் பதற்றத்திலேயே சீனா வைத்திருக்கிறது.

குறிப்பாக தென் சீனக் கடல் வழியாக சென்ற பிலிப்பைன்ஸ், வியட்நாம், புரூணே உள்ளிட்ட நாடுகளின் கப்பல்களை சீனா தாக்கியதால், பல ஆண்டுகளாகவே இந்தப் பிராந்தியத்தில் பதற்றமான சூழல் நிலவியது.

இதனால் சீனாவுக்கு எதிராக நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றத்தின் கடல்சார் பிரச்னைகளைத் தீர்த்துவைக்கும் தீர்ப்பாயத்தை பிலிப்பைன்ஸ் நாடியது.

இந்த வழக்கில் கடந்த 2016-ஆம் ஆண்டு தீர்ப்பளித்த தீர்ப்பாயம், தென் சீன கடலுக்கு வரலாற்று ரீதியாகவே சீனா உரிமை கொண்டாட முடியாது என தீர்ப்பளித்தது. ஆனால், சர்வதேச மத்தியஸ்த தீர்ப்பாயத்தின் உத்தரவை ஏற்க மறுத்த சீனா, இந்த உத்தரவு செல்லுபடியாகாது என்றும், தென் சீன கடல் மீதான தங்களது ஆதிக்கத்தை யாராலும் அசைக்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்து வருகிறது.

சீனாவின் வெளியுறவு அமைச்சகமோ இன்னும் ஒரு படி மேலே போய், சர்வதேச தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவு வெற்று காகிதம் என எள்ளி நகையாடியது.

இந்தத் தீர்ப்பு வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, உள்ளிட்ட 13 நாடுகள் சர்வதேச தீர்ப்பாயம் பிறப்பித்த இந்த உத்தரவு வரலாற்றுச் சிறப்புவாய்ந்தது என கூறியதுடன், அதை சீனா மதித்து நடக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றன. ((GFX-OUT))

இந்தப் பட்டியலில் தனது அண்டை நாடான ஜப்பானும் இணைந்தது சீனாவுக்கும் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால், பெய்ஜிங்கில் உள்ள ஜப்பான் தூதரை நேரில் அழைத்து சீனா கண்டனத்தைப் பதிவு செய்ததுடன், தனது பிராந்திய விவகாரத்தில் ஜப்பான் தேவையில்லாமல் மூக்கை நுழைப்பதாக குற்றம்சாட்டியது.

தென் சீனக் கடலில் சீனாவின் இறையாண்மை ஒருபோதும் மாறிவிடாது என கூறியுள்ள சீனா, பிற நாடுகளுடன் இணைந்து சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டாமென ஜப்பானுக்கு அறிவுறுத்தியுள்ளது.

தனது அண்டை நாடுகளை பலவீனப்படுத்திவிட்டு, தென் சீன கடலில் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதில் சீனா சமீப காலமாகவே குறியாக இருக்கிறது. இந்தப் பிராந்தியத்தில் அமைந்துள்ள இறையாண்மைமிக்க தனிநாடான தைவான் மீது உரிமை கொண்டாடி வரும் சீனா, அதை தனது நாட்டின் ஒருபகுதியாகவே கருதுகிறது.

இதனால்தான் சர்வதேச பிரதிநிதிகள் தைவானுக்கு சுற்றுப்பயணம் சென்றால், முதல் நபராக ஓடிவந்து சீனா கண்டிக்கிறது. என்னதான் சீனா தொழில்நுட்ப ரீதியாக வளர்ந்த நாடாக இருந்தாலும், அதன் பாதுகாப்புத் துறை அதிநவீன தளவாடங்களைக் கொண்டிருந்தாலும், பாதுகாப்பு என்று வரும்போது அதன் அஸ்திவாரம் ஆட்டம் காணத் தான் செய்கிறது…

Tags: Strait of HormuzJapanese ambassador summonedglobal maritime tradechinaOmanIranSouth China Sea.
Share
Tweet
SendShare
Previous Post

யுத்த களமான ஹார்முஸ் ஜலசந்தி : பலியாகும் இந்திய மாலுமிகள் : காரணம் என்ன? – சிறப்பு தொகுப்பு!

Next Post

அரசுப் பள்ளிகளில் பரவும் ஆயுத கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Related News

5 மாதங்களுக்கு முன்பே வெள்ள அபாய எச்சரிக்கை : புறக்கணித்த நேபாள அரசு – சிறப்பு கட்டுரை!

பிரதமர் ஆசையில் விஜய் பலியாகிவிடக் கூடாது – அர்ஜுன் சம்பத்

அதுவும் கொள்ளை தான் – ஹெச்.ராஜா விமர்சனம்!

லஞ்சம் கேட்கும் பணியாளர் மீது உடனடி நடவடிக்கை – அமைச்சர் வெங்கட ரமணன் எச்சரிக்கை!

வேற்றுமையில் ஒற்றுமையை உலகிற்கு உணர்த்துவதே பாரதத்தின் நோக்கம் – மோகன் பாகவத்

மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும், மனிதநேயம் ஒன்றுதான் – மோகன் பாகவத்

Load More

அண்மைச் செய்திகள்

உஸ்பெகிஸ்தான் சென்றடைந்த பிரதமர் மோடி; உற்சாக வரவேற்பு

நேபாள வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வங்கி லாக்கரில் இருந்து 93 லட்சம் கொள்ளை – 29 பேர் கைது!

சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டு குறித்த தவெக எம்எல்ஏ-வின் பேச்சு : அதிமுக கண்டனம்!

4 நாள் அரசு முறைப்பயணம் – உஸ்பெகிஸ்தான் புறப்பட்டார் பிரதமர் மோடி!

இன்றைய தங்கம் விலை!

டி.என்.பி.எல்.கிரிக்கெட் தொடர் – சாம்பியன் பட்டம் வென்றது கோவை!

வெனிசுலா நாட்டுடன் எண்ணெய் ஒப்பந்தம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க இஸ்கானில் நடைபெற்ற வீடற்ற மக்களுக்கான உணவு வழங்கும்  நிகழ்ச்சி – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பங்கேற்பு!

நேபாள வெள்ளத்தில் மீட்கப்பட்ட 21 தமிழர்கள் – சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

4 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளுக்கு புறப்படுகிறார் பிரதமர் மோடி – ஷாங்காய் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies