ஆடி மாத முதல் வெள்ளி - அம்மன் கோயில்களில் திரண்ட பக்தர்கள்!
Oct 17, 2026, 01:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆடி மாத முதல் வெள்ளி – அம்மன் கோயில்களில் திரண்ட பக்தர்கள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 17, 2026, 03:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆடி மாதப் பிறப்பு மற்றும் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள அம்மன் கோயில்களில் பக்தர்கள் திரளாக குவிந்து வழிபாடு நடத்தினர்.

அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படும் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் விரதமிருந்து அம்மன் கோயிலுக்கு சென்று வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம். இதையொட்டி, ஆடி மாதப் பிறப்பு மற்றும் முதல் ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு அம்மன் கோயில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் திரளாக குவிந்தனர். திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்து வழிபட்டனர்.

இதேபோன்று, திருச்சி மாவட்டம் உறையூர் வெக்காளியம்மன் கோயிலில் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்து வழிபட்டனர்.

சென்னையை அடுத்த திருவேற்காட்டில் உள்ள தேவி கருமாரியம்மன் கோயிலில், ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி அதிகாலை கோ பூஜையுடன் நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்து வழிபட்டனர்.

மதுரை மாவட்டம், வண்டியூரில் உள்ள மாரியம்மன் கோயிலில், ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதுரையைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து வழிபட்டனர்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மீனாட்சிபுரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில், ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மனுக்கு மஞ்சள் அபிஷேகம் செய்வதற்காக, விடிய விடிய 350 கிலோ பச்சை மஞ்சளை அம்மியில் அரைத்து பெண்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த நிகழ்வில் ஏராளமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் பசலிகுட்டை பகுதியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி அதிகாலை முதலே திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசித்து வழிபட்டனர். காவடி எடுத்தும், பால் குடம் ஏந்தி வந்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Tags: adi first fridayVekkaliyamman TempletamilnaduAmman templesSamayapuram Mariamman Temple
Share
Tweet
SendShare
Previous Post

நாட்டின் முதல் மற்றும் உலகின் நீண்ட தூர ஹைட்ரஜன் ரயில் சேவை – பிரதமர் தொடங்கி வைத்தார்!

Next Post

மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் ஏன்? – சிறப்பு தொகுப்பு!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் மீதான முன் ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

பழனியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies