500 இல்லை... இனி 100 சதவீதம் : ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க அமெரிக்கா சலுகை, இந்தியாவிற்கு என்ன லாபம் ? - சிறப்பு கட்டுரை!
Jul 17, 2026, 06:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

500 இல்லை… இனி 100 சதவீதம் : ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க அமெரிக்கா சலுகை, இந்தியாவிற்கு என்ன லாபம் ? – சிறப்பு கட்டுரை!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 17, 2026, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது 500 சதவீதம் வரி விதிக்கும் மசோதாவில் அமெரிக்கா முக்கியமான திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி அதிகபட்ச வரி வரம்பை 100 சதவீதமாக குறைத்துள்ளது. இந்தியாவுக்கு இதனால் என்ன லாபம் என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

ரஷ்யாவுக்கு பெரும் அழுத்தத்தைக் கொடுக்கவும் அந்நாட்டுக்குச் செல்லும் வருவாயைத் தடுக்கவும் திட்டமிட்டு வந்த அமெரிக்கா, ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் எரிசக்தி வாங்கும் நாடுகள் மீது 500 சதவீத அசுர வரி விதிக்க முடிவு செய்திருந்தது.

உக்ரைன் போருக்கு நிதியளிக்கும் ரஷ்யாவின் திறனைக் குறைப்பதே இந்தச் சட்டத்தின் நோக்கம் என்று கூறப்பட்டிருந்தது.

வரிகளைத் தவிர, சட்ட விரோதமாக எண்ணையை ஏற்றிச் செல்லும் ரஷ்யாவின் ‘நிழல் கப்பல் படை’ என்று அழைக்கப்படும் டேங்கர்கள் மீதான தடைகளும் இதில் குறிப்பிடப் பட்டுள்ளது.

கடந்த வாரம் மறைந்த அமெரிக்கச் செனட்டர் லிண்ட்சே கிரஹாம் முன்மொழிந்த சட்ட வரைவில் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை வாங்கும் இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் மீது 500 சதவீத வரி விதிக்க வழிவகை செய்யப் பட்டிருந்தது.

ரஷ்யாவிடமிருந்து அதிகமாக கச்சா எண்ணெயை கொள்முதல் செய்யும் சீனா, இந்தியா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி மற்றும் அஜர்பைஜான் ஆகிய ஐந்து நாடுகளையும் இயற்கை எரிவாயுவை அதிக அளவில் இறக்குமதி செய்யும் சீனா, பிரான்ஸ், ஜப்பான், ஹங்கேரி மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளையும் குறிவைத்து இந்த புதிய சட்டம் திட்டமிடப் பட்டிருந்தது.

இந்நிலையில், அமெரிக்காவின் குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் தேவையான திருத்தங்களுடன்கூடிய புதிய தடை மசோதாவை அமெரிக்க செனட் சபை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தப் புதிய சட்டம், உக்ரைன் போருக்கு பிந்தைய உலகளாவிய எரிசக்தி வர்த்தகத்தில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்றும், எரிசக்தி அச்சுறுத்தல்களை வெகுவாக குறைக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.

முன்னதாக 2022-ல் ரஷ்யா-உக்ரைன் மோதல் தொடங்கியதிலிருந்து, ரஷ்யாவின் எண்ணையை தள்ளுபடி விலையில் இந்தியா இறக்குமதி செய்து வருகிறது.

தேசிய நலன், கட்டுப்படியாகும் விலை மற்றும் விநியோகப் பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையிலேயே நாட்டின் எரிசக்தி இறக்குமதிகள் மேற்கொள்ளப்படுவதாக ரஷ்யாவிடமிருந்து கொள்முதல் செய்வதை இந்தியா தொடர்ந்து நியாயப்படுத்தி வருகிறது.

மேலும் இந்திய சுத்திகரிப்பு ஆலைகள் சர்வதேசக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பதோடு, நுகர்வோருக்குக் கட்டுப்படியாகும் விலையில் எரிபொருள் கிடைப்பதையும் உறுதி செய்வதாகவும் மத்திய அரசு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் ரஷ்யாவின் மொத்த இயற்கை எரிவாயு ஏற்றுமதியில் 15 சதவீதத்திற்கும் குறைவாக இறக்குமதி செய்து, தங்களின் தேவையை படிப்படியாக குறைத்து வரும் நாடுகளுக்கு இந்த சட்ட மசோதாவில் சில விதிவிலக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

மேலும், அமெரிக்காவின் தேசிய நலன்களுக்கு தேவை என்று கருதினால், இந்தத் தடைகளைத் தற்காலிகமாகத் தள்ளுபடி செய்யும் பிரத்யேக அதிகாரத்தையும் அதிபர் ட்ரம்புக்கு இந்த புதிய சட்ட திருத்த மசோதா திருத்தம் வழங்குகிறது.

லிண்ட்சேவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த மசோதா கொண்டுவரப்படுவதாகவும், எந்த தடையும் இல்லாமல் மசோதா நிறைவேற நல்ல வாய்ப்புள்ளதாகவும் அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

திருத்தப்பட்ட இந்தத் தடைகள் மசோதா, அமெரிக்க அதிபரின் ஒப்புதலுக்காகச் செல்வதற்கு முன்பு, செனட் சபையில் நடைமுறைத் தடைகளைக் கடந்து, பிரதிநிதிகள் சபையிலும் நிறைவேற்றப்பட வேண்டும் என்றாலும், 26 செனட்டர்களின் ஆதரவைப் பெற்றுள்ள இந்த மசோதா, வெள்ளை மாளிகையின் இறுதி ஒப்புதலுக்குப் பிறகு விரைவில் சட்டமாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இறுதிக் கட்டண முறையை அமெரிக்கா எப்படி செயல்படுத்துகிறது ? இந்தியாவுக்கு ஏதேனும் விலக்கு விதிகளைப் பயன்படுத்துகிறதா ? என்பதைப் பொறுத்தே இந்தியாவுக்கு இது லாபமா என்பதை முடிவு செய்ய முடியும்.

Tags: iran war newsus iran war liveiran war updateamerica taxiran warRussia oil purchaseIran-US war
ShareTweetSendShare
Previous Post

மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் ஏன்? – சிறப்பு தொகுப்பு!

Related News

மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் ஏன்? – சிறப்பு தொகுப்பு!

ஆடி மாத முதல் வெள்ளி – அம்மன் கோயில்களில் திரண்ட பக்தர்கள்!

நாட்டின் முதல் மற்றும் உலகின் நீண்ட தூர ஹைட்ரஜன் ரயில் சேவை – பிரதமர் தொடங்கி வைத்தார்!

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதியில் ஆடித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

கரூரில் முதல்வருக்கு நன்றி தெரிவித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் – இந்து அமைப்புகள் கண்டனம்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

500 இல்லை… இனி 100 சதவீதம் : ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க அமெரிக்கா சலுகை, இந்தியாவிற்கு என்ன லாபம் ? – சிறப்பு கட்டுரை!

“மேகாலயா பிராஜக்ட்” – 15 தவெக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயற்சித்தது அம்பலம்!

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய பதிவுத்துறை டிஐஜி ஆனந்துக்கு பதவி உயர்வு வழங்க மறுத்தது சரிதான் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

பழனி கோவில் நில பதிவு விவகாரம் – சிபிசிஐடி விசாரணை தீவிரம்!

நாகர்கோவில் சபரி வர்மன் உயிரிழந்த விவகாரம் – தென்தாமரைக்குளம் எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்!

ஊழல் புகாரில் சிக்கினால் அமைச்சர் பதவி பறிக்கப்படும் – முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை!

ஹைட்ரஜன் ரயில்கள் கொண்ட ஒருசில நாடுகளில் இந்தியாவும் இணைகிறது – பிரதமர் மோடி பெருமிதம்!

நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் – இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

நீட் தேர்வு முடிவு வெளியானது – 11,21,000 மாணவர்கள் தேர்ச்சி!

ஊழல் புகாரில் சிக்கினால் பதவி பறிக்கப்படும்; முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies