கர்நாடக மாநிலம், தும்கூர் அருகே கதவில் சிக்கி துண்டான மாணவியின் கைவிரல்களை தூக்கி எறிந்த பள்ளி ஆசிரியரின் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
தும்கூர் அருகே உள்ள கோலூரில் இயங்கி வந்த அரசு தொடக்க பள்ளியில் சின்மயி தேவி என்பவர் ஒன்றாம் வகுப்பு பயின்று வந்தார்.
சம்பவத்தன்று மதிய உணவுக்காக வரிசையில் நின்றிருந்த சின்மயி தேவியின் கைவிரல்கள் இரும்பு கதவில் சிக்கி துண்டாகியுள்ளன.
இருப்பினும் மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாத ஆசிரியர், துண்டான கைவிரல்களை குப்பையில் தூக்கி வீசியுள்ளார்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பள்ளி நிர்வாகம் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளின் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
















