மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம் - சட்டப்பேரவையில் காரசார வாக்குவாதம்!
Apr 6, 2026, 05:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம் – சட்டப்பேரவையில் காரசார வாக்குவாதம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 18, 2026, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்க ஸ்டாலின்தான் காரணம் என சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இடஒதுக்கீடு குறித்து திமுகவினர் பேசியதற்கு ஆதாரம் உண்டா என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

சட்டசபையில் பேசிய அதிமுக உறுப்பினர் கே.பி.முனுசாமி, தமிழகத்தைவிட இருமடங்கு அதிக மக்கள் தொகை கொண்ட உத்தரப்பிரதேசத்தின் கடன் 7 லட்சம் கோடியாக இருக்கும் நிலையில், தமிழகத்தின் கடன் சுமை 10 லட்சம் கோடியை தாண்டியிருப்பதாக கூறினார்.

தமிழகத்தில் 75 ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்கள் வாங்கிய மொத்த கடனைவிட கடந்த 5 ஆண்டுகளில் தற்போதைய ஆட்சியின் கடன் மட்டும் 5.5 லட்சம் கோடி உயர்ந்திருப்பதன் மூலம் தமிழக அரசின் நிதி மேலாண்மையை புரிந்து கொள்ள முடிவதாக அவர் விமர்சித்தார்.

பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்போது குறைய வேண்டிய கடன் சுமை, தமிழகத்தில் மட்டும் அதிகரித்துக் கொண்டிருப்பதாகவும், அவற்றை மறைத்து ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் திமுக அரசு போலியான விளம்பரங்களை செய்து வருவதாகவும் கே.பி.முனுசாமி குற்றஞ்சாட்டினார்.

பின்னர் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஆளுநர் மாளிகைக்கு முன்பாக, எதிர்க்கட்சியாக இருந்த திமுக நடத்திய போராட்டத்தால்தான் 7.5 சதவீத இடஒதுக்கீடு சட்டமானதாகத் தெரிவித்தார்.

இதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை திமுகதான் வலியுறுத்தியது என்பது தவறான தகவல் என்று கூறினார்.

உண்மைக்கு புறம்பான தகவல்கள் சட்டப்பேரவையில் பேசப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளில் சேர 7.5 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வந்தவர் எடப்பாடி பழனிசாமி என கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியனின் பேச்சை கண்டித்து அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டுள்ளதால் சட்டசபையில் காரசாரமான விவாதம் நடந்தது.

Tags: Tamil Nadu debutEdappadi PalaniswamireservationMinister M. SubramanianK.P. Munusamy
ShareTweetSendShare
Previous Post

டிரம்ப் அறிவிப்பு எதிரொலி – ரஷ்ய பொருட்கள் இறக்குமதி 40 சதவீதம் குறைவு!

Next Post

பிரதமர் மோடியுடன் சுந்தர் பிச்சை சந்திப்பு – ஏ.ஐ தொழில்நுட்பம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை!

Related News

ஊடுருவல்காரர்களை வெளியேற்ற பாஜக-வுக்கு வாக்களியுங்கள் – பிரதமர் மோடி!

மீண்டும் எடப்பாடியார் ஆட்சி அமைய வேண்டும்! – முன்னாள் அமைச்சர் தங்கமணி

சிறுபான்மை மக்களுக்கு எதிரானவர் காங்கிரஸ் வேட்பாளர் – பாஜக வேட்பாளர் விஜய தரணி குற்றச்சாட்டு!

சட்டமன்ற தேர்தல்: தமிழகத்திற்கு படையெடுக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர்கள்!

அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை திமுக அரசு கிடப்பில் போட்டது- மத்திய அமைச்சர் எல்.முருகன்!

நெருக்கடி நிலையிலும் பெட்ரோல் வினியோகம் – மத்திய அரசுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பாராட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

தென்மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகள் குறைக்கப்படாது – பிரதமர் மோடி உறுதி!

இனியும் மொழியை வைத்து திமுக அரசியல் செய்ய முடியாது – தமிழிசை உறுதி!

அரசியல் தோல்விகளை மறைக்க இந்தி திணிப்பு என நாடகம் ஆடுவதா? – தர்மேந்திர பிரதான் கேள்வி!

மக்களுடன் தரையில் அமர்ந்து வாக்கு சேகரித்த கன்னியாகுமரி அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம்!

அதிமுக அழுத்தம் காரணமாக மகளிர் உரிமைத்தொகையை திமுக கொடுத்தது – இபிஎஸ்

அரசு கஜானாவை ஏடிஎம் இயந்திரம் போல் பயன்படுத்தும் ஸ்டாலின் குடும்பம் – பியூஷ் கோயல்

 புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் – பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு!

மீனவர்களை மீட்டதைக்கூட கொச்சைப்படுத்தி அரசியலாக்குகின்றனர் – நயினார் நாகேந்திரன்

ஈரானில் சிக்கி தவித்த 327 மீனவர்கள் சென்னை வந்தனர் – பாஜக தலைவர்கள் வரவேற்பு!

அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு தேர்தலில் வெற்றி பெற வேண்டும் – பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies