போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடுகளுக்கு சென்றுவந்த 2 பேர், மதுரை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.
தென்காசி மாவட்டத்தை சேர்ந்த பெரியசாமி என்பவர், துபாயில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அவரது பாஸ்போட்டை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அதில் பிறந்த தேதி, பெயரை மோசடியாக திருத்தம் செய்தது தெரியவந்தது. விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கருப்பையா என்ற பயணியும் இதேபோன்ற மோசடியில் ஈடுபட்டது தெரியவந்ததால் இருவரையும் விமானநிலைய அதிகாரிகள் கைது செய்தனர்.
















