தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணியை மதுரை கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா பார்வையிட்டார்.
அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் சுமார் 17 கோடி ரூபாயில், திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் சீரமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனை கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் ஆய்வு செய்தார். அப்போது ரயில் நிலைய நடைமேடை தூய்மையின்றி இருந்ததால், அவர் அதிகாரிளை கடிந்து கொண்டார்.
பின்னர் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு ஓம் பிரகாஷ் மீனா உத்தரவிட்டார்.
















