பெரு நாட்டின் அரேக்வியாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கார்கள் அடித்துச் செல்லப்பட்டன.
தென்அமெரிக்க நாடானா பெருவின் அரேக்வியா மாகாணத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
குறிப்பாக செரோ கொலராடோ மாவட்டம் மிக மோசமான பாதிப்புகளைச் சந்தித்துள்ளது.
இந்த பகுதியில் சரிவான வீதிகளில் மழைநீர் காட்டாற்று வெள்ளம்போல் பெருக்கெடுத்தோடியதால், சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், இருசக்கர வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன.
இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
















