சபரிமலையில் இளம்பெண்கள் வருவதை தடுத்ததால்தான் கேரள அரசு தன்னை கைது செய்ததாக தந்திரி கண்டரரு ராஜீவரு குற்றம்சாட்டி உள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு வழக்கில், மூத்த தந்திரி கண்டரரு ராஜீவரு, கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.
அவர் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் தாக்கல் செய்யவில்லை எனக்கூறி கொல்லம் நீதிமன்றம் ஜாமினில் விடுவித்தது.
இந்நிலையில், ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தந்திரி குறிப்பிட்டிருந்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
அதில், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இளம்பெண்கள் வர கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், பழிவாங்கும் நோக்கில் கேரள அரசு தன்னை கைது செய்ததாக தந்திரி கண்டரரு ராஜீவரு கூறியுள்ளார்.
















