மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் கேமிங் பிரிவான எக்ஸ்பாக்ஸ் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக ஆஷா சா்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
எக்ஸ்பாக்ஸ் பிரிவின் முகமாகத் திகழ்ந்த ஃபில் ஸ்பென்சா் பணிஓய்வு பெறுவதைத் தொடா்ந்து, இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
2011-இல் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் தனது பணியை தொடங்கிய ஆஷா சர்மா, பின்னா் மெட்டா நிறுவனத்தில் மெசஞ்சா் மற்றும் இன்ஸ்டாகிராம் தயாரிப்பு பிரிவின் துணைத் தலைவராகவும், இன்ஸ்டாகாா்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவா் ஆவார்.
















