ஆஸ்திரியாவில் உள்ள ஹிட்லரின் வீட்டை காவல்நிலையமாக மாற்றும் பணியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டுள்ளது.
1938ம் ஆண்டு வாக்கில், உலகின் சர்வாதிகாரியாக திகழ்ந்த ஹிட்லரின் வீடு ஆஸ்திரியாவின் பிரவுனாவ் ஆம்-இன் நகர மையத்தில் உள்ளது.
இக்கட்டடம் நாஜி ஆதரவாளர்களின் சின்னமாக மாறாமல் தடுக்க, ஆஸ்திரிய அரசு, அதை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
இந்த வீட்டை 216 கோடி ரூபாய் மதிப்பில் காவல்நிலையமாக மாற்ற அந்நாட்டு அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. இப்பணி நடப்பாண்டு இறுதிக்குள் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
















