மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம் முன் ஜாமின் கோரிய மனுவை மதுரை உயர்நீதிமன்ற அமர்வு தள்ளுபடி செய்தது.
கடந்த ஆண்டு ஜூனில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக இருந்த அஜித் குமார், நகை காணாமல் போனதாக எழுந்த புகாரின் பேரில் காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்டார்.
இது தொடர்பாக 5 காவலர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டு குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம் உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வில் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கி வருவதுடன், நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்பட தயாராக இருப்பதால் தனக்கு முன்ஜாமின் வழங்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
இதனை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வு, சண்முகசுந்தரத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
















