பாரத் டாக்ஸி சர்வீஸ் ஓட்டுநர்கள் பொறுமையுடன் பணியாற்ற வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் கூட்டுறவுத்துறை சார்பில் பாரத் டாக்ஸி என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த செயலி மூலம் பாரத் டாக்ஸிகளை புக் செய்து பொதுமக்கள் சேவையை பெற முடியும்.
ஓலா, ஊபர் சேவைகள் போல மத்திய அரசு அறிமுகப்பட்டுத்தியுள்ள இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் மிகுந்த வரவேற்பை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாரத் டாக்ஸியின் செயல்பாடுகள் உள்ளிட்டவற்றை பற்றி விவரித்த மத்திய அமைச்சர் அமித்ஷா ஓட்டுநர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்
அதில், கார் ஓட்டுநர்களே நிறுவனத்தின் உரிமையாளர்கள் எனவும் நமக்கு லாபம் ஈட்டுவது நோக்கமல்ல , சேவைகளை விரிவுபடுத்துவதே நோக்கம் எனவும் தெரிவித்தார். இந்த செயலியில் ஓட்டுநர்களிடம் இருந்து கமிஷன் பெறப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
















