கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்த சென்னை ஐஐடி.. - 50,000 மாணவர்களின் கனவை நனவாக்கி சாதனை!
Mar 15, 2026, 06:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்த சென்னை ஐஐடி.. – 50,000 மாணவர்களின் கனவை நனவாக்கி சாதனை!

Manikandan by Manikandan
Feb 24, 2026, 07:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“அனைவருக்கும் ஐஐடி” என்ற நோக்கத்துடன் சென்னை ஐஐடியில் தொடங்கப்பட்ட இளங்கலை பட்டப்படிப்புகள், கடந்த 4 ஆண்டுகளில் 50 ஆயிரம் மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பை வழங்கி, பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது பற்றி சற்று விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்…

ஒரு காலத்தில் ஐஐடி-யில் சேர்ந்து படிக்க வேண்டும் என்ற பெருங்கனவு பலருக்கு எட்டாக்கனியாக இருந்தது. ஆனால் தற்போது சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள், கிராமப்புற இளைஞர்கள், வேலைக்கு செல்வோர், இல்லத்தரசிகள் என அனைவரும் அந்த கனவை நிஜமாக்கிக்கொள்ள சென்னை ஐஐடி வாய்ப்பு வழங்கி வருகிறது. யார் வேண்டுமானாலும் படிக்கலாம் என்ற எண்ணத்துடன் சென்னை ஐஐடி நிர்வாகம் முன்னெடுத்த முயற்சி, பலரின் வாழ்க்கையில் கல்வி மூலம் மாற்றத்தை உருவாக்கும் மனிதநேய பயணமாக மாறியுள்ளது.

குறிப்பாக “அனைவருக்கும் ஐஐடி” என்ற நோக்கத்துடன், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் சென்னை ஐஐடி-யில் தொடங்கப்பட்ட இளங்கலை பட்டப்படிப்புகள், இன்று ஆயிரக்கணக்கான மாணவர்களின் உயர்கல்வி கனவுகளை நனவாக்கி வருகிறது. இந்த மாற்றியமைக்கப்பட்ட மற்றும் ஆன்லைன் கல்வி திட்டங்களின் மூலம், இதுவரை சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்துள்ளதாக சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது. வசதி, வயது, நேரம் ஆகிய கட்டுப்பாடுகளின்றி, யார் வேண்டுமானாலும் இதில் சேர முடியும் என்பதே இந்த திட்டத்தின் தனிச்சிறப்பாக பார்க்கப்படுகிறது.

தற்போதைய ஏஐ யுகத்தில், கணிதம், தரவுகள், தொழில்நுட்ப மேலாண்மை, செமிகண்டக்டர் தொழில்நுட்பம், ஏரோஸ்பேஸ் போன்ற துறைகள் மிக முக்கியமானதாக உருவெடுத்துள்ளன. இதனை கருத்தில் கொண்டு, ஏற்கனவே ஏரோஸ்பேஸ் டெக்னாலஜி, எலக்ட்ரானிக் சிஸ்டம், டேட்டா சயின்ஸ் போன்ற இளங்கலை பட்டப்படிப்புகளை வெற்றிகரமாக நடத்தி வரும் சென்னை ஐஐடி, தற்போது மேலாண்மை மற்றும் தரவு அறிவியல் என்ற புதிய இளங்கலை பட்டப்படிப்பையும் தொடங்கியுள்ளது.

இந்த படிப்புகள் மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாக ஐஐடி நிர்வாகம் தெரிவிக்கிறது. 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் முதல், தற்போது கல்லூரியில் பயிலும் மாணவர்கள், இல்லத்தரசிகள் என அனைவரும் இதில் சேர முடியும். அதற்கு ஐஐடி நடத்தும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே போதுமானது என்பதால், ஏராளமானோர் போட்டிபோட்டுக்கொண்டு இந்த வாய்ப்பை பயன்படுத்தி வருகின்றனர். அத்துடன் இந்த திட்டத்தின் கீழ் ஸ்காலர்ஷிப் வசதி வழங்கப்படுவதும் மாணவர்களுக்கு கூடுதல் ஊக்கம் அளிக்கிறது.

இந்த இளங்கலை மேலாண்மை மற்றும் தரவு அறிவியல் பட்டப்படிப்பு, உற்பத்தி துறை, வங்கி, இ-காமர்ஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என ஐஐடி பேராசிரியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். உன்னத பாரதம் அபியான் திட்டத்தின் கீழ், கிராமப்புற மாணவர்களை தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்றவர்களாகவும், தொழில் முனைவோர்களாகவும் உருவாக்கும் நோக்கில் இந்த இளங்கலை பட்டப்படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை ஐஐடி விளக்கமளித்துள்ளது.

Tags: education opportunitiesIIT Chennaiundergraduate programs4 years50000 students
ShareTweetSendShare
Previous Post

பற்றி எரியும் மெக்சிகோ நகரங்கள் – போதை கடத்தல் கும்பல் தலைவன் சுட்டுக்கொலை.. சிறப்பு தொகுப்பு!

Next Post

அரசு முறைப் பயணமாக இன்று இஸ்ரேல் செல்கிறார் பிரதமர் மோடி!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies