உக்ரைன் – ரஷ்யா இடையேயான ஐ.நா சபையின் போர் நிறுத்த தீர்மானத்திற்கு 107 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன,
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான பிரச்னை தொடங்கி நான்கு ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதைக் குறிக்கும் வகையில் ‘உக்ரைனில் நிலையான அமைதிக்கு ஆதரவு’ என்ற தலைப்பில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
193 உறுப்பினர்களைக் கொண்ட பொதுச்சபையில் 107 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. ரஷ்யா உட்பட 12 நாடுகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தன.
இந்தியா, சீனா, பிரேசில், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 51 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகித்தன.
இதில் அமெரிக்கா பங்கேற்காமல் விலகியிருப்பது சர்வதேச அரங்கில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார்.
















