கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவராக திகழ்ந்த நல்லகண்ணுவின் அரசியல் வாழ்க்கை பற்றிய தொகுப்பை இனி பார்க்கலாம்….
1925ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி ராமசாமி – கருப்பாயி தம்பதியின் மூன்றாவது மகனாக ஸ்ரீவைகுண்டத்தில் நல்லகண்ணு பிறந்தார்
1943ஆம் ஆண்டு தன்னுடைய 18வது வயதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த நல்லகண்ணு இறுதிவரை அக்கட்சியிலேயே பயணித்துள்ளார்.
பள்ளிப் பருவத்தில் காந்தியவாதியாக இருந்த நல்லகண்ணு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தினார்
திருநெல்வேலியில் நடைபெற்ற பல்வேறு சுதந்திரப் போராட்டங்களிலும் நல்லகண்ணு பங்கேற்றுள்ளார்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உழுபவனுக்கே நிலம் சொந்தம் எனும் போராட்டத்தை முன்னெடுத்ததோடு, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் போராடினார்.
1980ம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட்ட நல்லகண்ணு தோல்வியை தழுவினார்.
1999ஆம் ஆண்டு கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட நல்லகண்ணு பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் தோல்வியடைந்தார்.
2010ம் ஆண்டு தாமிரபரணி ஆற்றில் அரசு மற்றும் தனியார் மணல் அள்ளுவதை எதிர்த்த வழக்கில் நல்லகண்ணுவே நேரில் ஆஜராகி வாதாடியுள்ளார்.
தமிழ்நாட்டிற்கும், தமிழின் வளர்ச்சிக்கும் பாடுபட்டதாகக் கூறி 2022 ஆம் ஆண்டு தமிழக அரசின் சார்பாக தகைசால் தமிழர் விருது நல்லக்கண்ணுவிற்கு வழங்கப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக தன் அரசியல் பயணத்தை தொடங்கிய நல்லகண்ணு கிளைச்செயலாளர், விவசாய சங்கத்தின் மாநிலச் செயலாளர், தேசிய குழு உறுப்பினர், மாநிலச் செயலாளர் என பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
















