இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
சென்னை தி.நகரிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக நல்லகண்ணு உடல் வைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், நல்லகண்ணுவின் உடல் வைக்கப்பட்டிருந்த போது, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல், தவெக தலைவர் விஜய்யும் நல்லகண்ணுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த நல்லகண்ணுவின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர், அங்கிருந்த நிர்வாகிகளுக்கு ஆறுதல் கூறினார்.
















